அதிரை APL கிரிக்கெட் தொடரின் பரபரப்பான போட்டியில் AFCC அணி திரில் வெற்றி!

Editorial
0


அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.9ம் நாளான இன்று அதிரை AFCC அணியை எதிர்த்து RVMCC தஞ்சாவூர் அணி விளையாடியது. டாஸ் வென்ற தஞ்சாவூர் அணி மட்டைப்பணியை தேர்வு செய்தது. 

அதிரை AFCC அணியின் சிறப்பான பந்துவீச்சால் தஞ்சை அணி துவக்கத்தில் இருந்தே திணரியது. அதிலும் AFCC அணியை சேர்ந்த சலீம் அவர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தஞ்சை அணி பேட்ஸ்மேன்கள் 4 விக்கெட்டுக்களை  இழந்தது. இறுதியாக தஞ்சை அணி 121 ரண்களை குவித்தது. 

122 ரண்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய AFCC அணியினர் ரண்களை குவித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களும் சரிந்தன. ஒரு கட்டத்தில் குறைவான பந்துகளுக்கு அதிகமான ரண்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் இருந்த AFCC அணி அஸ்லம் அவர்களின் அதிரடி ஆட்டத்தால் மீண்டும் எழுச்சியுடன் விளையாடியது. இறுதியாக 2 பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில் இடது கை பேட்ஸ்மேன் சலீம் அவர்கள் மிரட்டலான சிக்சை அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

4 ஓவர்களுக்கு 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன், இறுதியில் அருமையான சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெற செய்த சலீம் அவர்கள் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)