ஒருவரிடம் இருந்து அவர் பற்றிய தகவல்களை எளிமையாக பெற வேண்டுமென்றால் அவரிடம் முகநூலில் அவரது நண்பர் அல்லது உறவினர் போல் முகநூலில் போலி ஐ.டி திறந்து அவரிடம் பல தகவல்களை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம். இது போன்று தற்போது திருடர்கள் பலர் முகநூலில் போலி ஐ.டி கள் மூலம் ஒருவரது அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொண்டு அவரது வீட்டில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க சில முகநூல் ஆர்வ கோளாறுகள் "குடும்பத்துடன் கோடை சுற்றுல்லா" என்றும் "வீட்டில் தனிமையில் நான் (feeling alone at home)" என்று எழுதி புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர். இது தவறு இல்லை என்றாலும் முகநூலில் உலாவும் சில திருடர்களுக்கு இந்த ஸ்டேட்டஸ் "என் வீட்டில் யாரும் இல்லை, போய் திருடிக் கொள்ளவும்" என்பது போல் உள்ளது. இதை பார்க்கும் திருடர்கள் அடுத்ததாக ஸ்டேட்டஸ் பதிவிடும் நபரின் முழு விபரத்தை தேடும் பொழுது அந்த நபரின் முழு வீட்டு முகவரியும் கிடைத்து விடுகிறது.
இவ்வாறு முகநூல் மூலம் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது கோடைகாலம் என்பதால் கோடையில் குடும்பத்துடன் உல்லாச சுற்றுலா செல்பவர்கள் முகநூலில் ஸ்டேட்டஸ் மற்றும் படங்கள் பதிவிடும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.
அதுபோல் முகநூலில் நண்பர் போலவோ, உறவினர் போலவோ புதிய ஐடியில் உங்களுக்கு மெசேஜ் வந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் தொடர்பு கொண்டு விசாரித்து பின்னர் மெசேஜ் செய்யவும்.
எச்சரிக்கை: இணையதளம் வாயிலாக பல குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. சமுக வலைதளங்களை உபயோகிப்பவர்கள் என்றும் விழிப்புடன் எச்சரிக்கை கையாள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

சிந்திப்போம்! செயல்படுவோம்!
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது