10th, +2 தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு!

Editorial
0

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியாகிறது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 3 ஆயிரத்து 298 மையங்களில் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.விடைத்தாள்கள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தேர்வு முடிவு வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா இன்று அறிவித்துள்ளார். பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதி காலை 10 மணிக்கும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி காலை 10 மணிக்கும் வெளியாகும் என அவர் தெரிவித்தார். adiraipirai.in dg1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

-Maalaimalar
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)