இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தி பரவும் பொய்யான செய்திகள்!

Editorial
1

வதந்திகளை பரப்பவும் வேண்டாம்;நம்பவும் வேண்டாம்;

ஓர் வேண்டுகோள்

கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றும், வாய்ஸ் மெஸேஜ் ஒன்றும் மிக வேகமாக பரவி வருகிறது.அந்தப் புகைப்படத்தில் ஆண்  ஒருவர் முக்காடு அணிந்த பெண்மணி ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போல காட்சி உள்ளது.அந்த புகைப்படத்தை தொடர்ந்து வரக்கூடிய வாய்ஸ் மெஸேஜில் புகைப்படத்தில் உள்ளவர்களை பற்றி ஒரு சகோதரர் விளக்கம் அளிக்கிறார்.அது என்ன விளக்கம்?

புகைப்படத்தில் உள்ள பெண்மணி லால்பேட்டையைச் சார்ந்தவர் என்றும், அவர் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும்,  அவரை சகோதர சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் இழுத்துச் சென்றுவிட்டதாகவும், அந்தப் புகைப்படத்தையும், வாய்ஸ் மெஸேஜையும் அதிகமாக ஷேர் செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியை கேள்விபட்டதிலிருந்து நம் மனது சங்கடமாகவே இருந்தது.இதைப் பற்றி ஊர்க்காரர்களிடம் விசாரித்துப் பார்த்ததில்,  இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், இது இட்டுக்கப்பட்ட பொய் என்றும், லால்பேட்டையின் மீது அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் நமக்கு தெரிவித்தனர்.அந்த தெளிவான விளக்கத்திற்க்குப் பின் தான் நம் மனது சற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.இதனிடையே 
இந்த விஷயத்தைப் பற்றி பல்வேறு சகோதரர்கள் நேரிலும், இன்பாக்ஸ் வாயிலாகவும் நம்மிடத்திலே இது போன்று உங்களூரில் நடந்ததா? என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.இப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்றும், இது பொய் என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் நாம் அவர்களுக்கு தெரிவித்து வருகின்றோம்.

அந்தப் புகைப்படமும், வாய்ஸ் மெஸேஜில் உள்ள செய்தியும் உண்மையாக இருக்குமேயானால் அது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.அதே நேரத்தில் இதை ஷேர் செய்ய வேண்டும் என்று சொல்லுவது நம்மீது நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்க்கு சமமாகும்.

ஒரு குறிப்பிட்ட ஊரின் மீது அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு மாறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிய அந்தச் சகோதரரை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இனிமேலாவது 
உண்மைக்கு மாற்றமான செய்திகளை யாரும்  மக்கள் மத்தியில் பரப்பவும் வேண்டாம்; நம்பவும் வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அன்பு வேண்டுகோளுடன் 
லால்பேட்டை குதரத்துல்லாஹ்
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவிற்கு நன்றி....

    லால்பேட்டை அஹமது ரிலா -லால்பேட்டை டைம்ஸ் இணையதள ஆசிரியர்

    ReplyDelete
Post a Comment