கிழிந்த ரூபாய் நோட்டுக்களை நாளை மாற்றலாம்!

Editorial
0
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்த நோட்டுக் கொள்கையின் கீழ், தனிச் சிறப்பு ஏற்பாடாக நாளைக்கு (25-ந் தேதி) 32 வணிக வங்கிகளின் 195 கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு, கிழிந்த, சிதைந்த நோட்டுகள் மற்றும் குறைபாடுடைய நோட்டுகளையும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் நாளை மாற்றிக்கொள்ளலாம். அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேசன் வங்கி, அலஹாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, சின்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைசியா வங்கி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, பெடரல் வங்கி, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, டி.என்.எஸ்.சி வங்கி, கதோலிக் சிரியன் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகளின் முக்கிய கிளைகளில் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)