திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள்.
வியாழக்கிழமை இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு, கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக¢கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர்.
இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. பால் டேங்கர் லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குவாலிஸ் காரில் சென்ற கார் டிரைவர் மோகன் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
இந்த விபத்தில் கார் முன்பகுதியில் டிரைவர் மோகன் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஒரு கை இல்லாமல் மீட்டனர். மேலும் பலருக்கு கால், கை துண்டாது. தலையில் பலத்த காயமடைந்து உடல் சிதறி பலியானார்கள்.
பலியானவர்களின் உடல்கள் மற்றும் சதைகள், மூளைகள் சிதறி கிடந்தது. தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள், கொடைக்காணலில் உள்ள ஒரு புது வீட்டில் பாத்தியா தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிப்பட்டி அருகே உள்ள அரவாக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன். இவருக்கு சொந்தமான வாடகைக் காரில் 9 பேரும் சென்றுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் மோகன், தமிம் அன்சாரி அலி (25), அபிசாலி (25), சையது இப்ராகிம் (25), அப்துல் ரகுமான் (35), ஹலிவுல்லா (25), பசீர்வுல்லா (35) ( இருவரும் அண்ணன், தம்பிகள்), அப்துல் ரகீம் (கடலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்தவர்), அலிபா ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலில் ரகுமான் (46) படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
இறைவா!அவர்களின் பாவங்களை மன்னிப்பாயாக அவரகளை இழந்துவாடும் குடும்பத்தார்களுக்கு அருள்புரிவாய்!
இறைவா!இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவர்களை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!இவரைகளை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆமீன்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது