
வீடுகளில் மீன் வளர்ப்பது இன்றைக்கு முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. அழகுக்காக மட்டுமின்றி, அமைதிக்காகவும் மீன் வளர்க்கிறார்கள் பலர்.இந்த வகையில் அதிரை சேர்மன் வாடி பேருந்து நிலையம் அருகில் டால்பின் வண்ண மீன்கள் நிலையம் நடத்தி வரும் கீழத்தெருவை சேர்ந்த தீன் முஹம்மத் அவர்களை சந்தித்தோம்.
அதிரையில் கடந்த 4 வருடங்களாக வண்ண மீன் நிலையம் நடத்தி வருகிறேன். எங்களிடம் பைட்டர், ஏஞ்சல்மீன், மோலி, கப்பீஸ், எஞ்சல், டைகர், கோல்டு பிஷ் போன்ற பல வகையான வண்ண மீன்கள் குறைந்த விலையில் எங்கள் வண்ண மீன் நிலையத்தில் கிடைக்கும் என்றார். மேலும் மீன்களுக்கு தேவையான உணவு வகைகள்,செடிகள், கண்ணாடி தொட்டிகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்றார்.மேலும் வண்ண மீன் வளர்ப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.
1)மீனை வாங்கி வந்த உடன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதற்க்கு தீனி போட முயல்வது தான் முதல் பிரச்சினை. மீனிற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் உணவு போடக் கூடாது. காலை ஒரு முறை மாலை ஒரு முறை உணவிட்டால் போதுமானது.மீன்கள் உணவில்லாமல் 2 ,3 தினங்கள் கூட உயிர்வாழும்.
2)மீனை வளர்ப்பது குடுவையாக இருந்தாலும் சரி தொட்டியாக இருந்தாலும் சரி ,மீனின் உருவ வளர்ச்சிக்கு ஏற்றவாறு தொட்டியில் மீன்களை இட வேண்டும். அளவுக்கு அதிகமாக தொட்டியில் மீன்களை வளர்த்தாலும் சுவாசிக்க தேவையான காற்று இல்லாமல் இறந்து விடும்.
3)மீன் நன்கு சுவாசிக்க ஏரேட்டர் உபயோகிப்பதுவும் சிறந்தது.
4)உணவாக இடுவதில் தினம் தயார் செய்யபட்ட கடைகளில் விற்க்கும் உணவுகள் மட்டும் இன்றி , மண்புழு போன்றாவற்றையும் அடிக்கடி கொடுக்கலாம். மீனின் வளர்ச்சிக்கு இது உதவும்.மீன் விற்கும் கடைகளில் இதற்குண்டான செடிகள் விற்கப்படுகின்றன. செடிகளை உடன் வளர்ப்பதால் மீனுக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.
5)மீன் வளர்க்கும் தொட்டியில் குறைந்த பட்சம் 20% நீரை தினம் எடுத்து விட்டு புதிய நீரை ஊற்றி வர வேண்டும். அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீரை முழுவதுமாக மாற்றவும் செய்யலாம்.
6)வளர்க்கும் மீன்களில் எதேனும் ஒன்று இறந்து விட்டால் உடன் அதை அகற்றி விட வேண்டும். இல்லையேல் அதனால் ஏற்படும் கிருமிகள் மற்ற மீன்களை பாதிக்கும் என்றார்.
Advertisement












1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது