சிதம்பரம் நகரில் ஈத்கா மஸ்ஜித் வளாகத்தில் 25.04.2015 அன்று தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது மாநாடு நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஷைகுல் ஹதீஸ் மௌலானா ஏ .இ .எம் .அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை வகித்தார் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவர் மௌலானா டி .ஜெ .எம் சலாஹுத்தீன் ரியாஜி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசின் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி .சம்பத் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் மௌலானா முஹம்மது ரிலா பாகவி ,பொருளாளர் மௌலானா முகமது காஸிம் பாகவி தமிழக வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன் ,கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் லால்பேட்டை ஜெ .எம்.ஏ .அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா ஏ .நூருல் அமீன் ,மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் , இலங்கை மௌலானா அப்துல் காலிக் ,மௌலானா முர்ஷித் அஹ்மது ,மௌலானா தர்வேஷ் ரஷாதி ,சேலம் மௌலானா அபூதாஹிர் ,சென்னை மௌலானா கான் பாகவி ,மௌலானா சதிதுத்தின் பாகவி ,மௌலானா தேங்கை ஷர்புதீன் ,மௌலானா இஸ்மாயில் நாஜி ,மௌலானா சபியுல்லா ,மௌலானா அப்துர் ரஜாக் ,மௌலானா ஏ .ஆர்.சலாஹுதீன் ,மௌலானா காஜா முஹைனுதீன் பாகவி ,சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஆர்.ஜியாவுதீன் செயலாளர் முஹம்மது அலி மற்றும் உலமாக்கள் சமுதாய பிரமுகர்கள் ,ஜமாஅத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .
விழாவிற்கான ஏற்பாட்டை மாநில ஜமாத்துல் உலமா சபையினரும் ,சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர் .
சிறப்பு அமர்வுகளாக MYM ஃபைஸல் மஹாலில் பெண்களுக்கு ஓர் நிகழ்சிசி வெள்ளிக்கிழமை (24.04.2015) மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், ஆலிம்களுக்கு மட்டும் சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நேற்று (25.04.2015 சனிக்கிழமை) பகல் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது