அதிரையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம்!(படங்கள் இணைப்பு)

1


அதிரையில் நெடுஞ்சாலை துறை சார்பில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பேட்டை வரை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை போடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க அதிரை நகர அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப்பள்ளி அருகிலும் சேர்மன் வாடி பேருந்து நிறுத்தம் அருகிலும் வேகத்தடை  அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வேகதடைப் பணிகளை அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை நகர கூட்டுறவு வங்கி துணை தலைவர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர் சிவக்குமார், அதிமுக உறுப்பினர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.








Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.

    பூப் போல வேகத்தடை, அழகான வேகத்தடை, தாலாட்டும் வேகத்தடை, தந்தி அடிக்காத வேகத்தடை, இருமல் வராத வேகத்தடை, புளிச்ச ஏப்பம் வராத வேகத்தடை.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete
Post a Comment