த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா ஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.த.மா.கா பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜி.கே.வாசன் த.மா.கா.வின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
உடனே பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத் துடன் கரவொலி எழுப்பி னார்கள்.அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
த.மா.கா.வின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று இரவே சென்னைக்கு தொண் டர்கள் வர தொடங்கி னார்கள். கார், வேன்களில் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்று நடந்த த.மா.கா வின் பொதுக்குழுவில் தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.மேலும் இந்த பொதுக்குழு கூட்டதிற்கு அதிரை மேலத்தெரு சேர்ந்த M.M.S குடும்பத்தை சேர்ந்த M.M.S.பஷீர் அஹ்மத் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
சென்னை ஆழ்வார்பேட் டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் இருந்து வானகரம் வரை த.மா.கா. கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் பிரமண்டமான வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது