முத்துப்பேட்டை தமுமுக 3 வது வார்டு செயலாளர் தாரிக் மீது காவி பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதல்...
இன்று மாலை தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது அவர்கள் சொந்தமான இடத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்க்காக சென்று கொண்டு இருந்த பொழுது அருகே புதியதாக கட்டி கொண்டு இருக்கும் ஒரு மாடி வீட்டில் 10க்கு மேற்ப்பட்ட நபர்கள் நின்று கொண்டு இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்களை பற்றி அசிங்கமான வார்த்தைகளால் எழுதி இருந்தனர்.
அதை பார்த்த தமுமுக 3 வது வார்டு செயலாளர் தாரிக் அவர்கள் ஏன் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மறைத்து வைத்த கட்டை,கம்பி போன்ற ஆயுதங்களால் துலுகன்களை உயிரோடு விடமாட்டோம் என்று அவரை கடுமையாக தாக்கினார்கள்.
தகவல் அறிந்த தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது, பேரூர் கழக செயலாளர் சம்சுதீன்,ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது மற்றும் தமுமுக நகர நிர்வாகிகள் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாஜகவை சேர்ந்த 10க்கு மேற்பட்டோர் மீது புகார் கொடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது...
தற்பொழுது இவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல்: முத்துப்பட்டை பைசல்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது