புத்தக தினம் - அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய கவிதை!

Editorial
0

நூலகத்தில் உலகைக் கண்டேன் - இந்த
    ****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன்
பாலகனாய் வாழ்ந்த போதும் - என்றும்
   ****படிப்பதில் இன்பம் கொண்டேன்

சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு
    ****சிறப்பான போதை நூலினத்தில்
கற்றலில் இனபம் ஏற்றியது - அதுவே
     ****காதலாய் நூலினத்தில் மாற்றியது

மூடிக் கிடந்தது நூலேடு! - கை
.. ****மெதுவாய்த் திறக்க முகங்கண்டேன்!
தேடித் தவித்தவன் பாலையிலே - ஓர்
****.தெள்ளிய . நீர்ச்சுனை கண்டதைப்போல்!


எத்தனை வண்ணம் நூலினத்தில்! - அவைகள்
.. *****இதுவரை ஏனெனைத் தீண்டவிலை?
புத்தம் புதிதாய் இன்றிருந்தும் - நிலை
.. ****புதிதிலை நித்தம் பரிச்சயமே!


சொல்லால் சுகம்பல ஊட்டிடவும் - புதுச்
.. ***சுருதியை நெஞ்சினில் மீட்டிடவும்
எல்லாம் முடித்தேன் எனும்போதும் - வே(று)
.. ****எதையோ தினந்தினம் காட்டிடவும்


விரலால் வரைந்தேன் நூலுடலில் - பக்கம்
.. ****விதவித மாக நெளிந்திடவே
குரலால் மொழிந்தேன் நூல்மொழியை! - கை
.. *****கொண்டு அணைத்தேன் நூலடலை


கண்ணால் நூலுடல் மேய்ந்திடினும் - நூல்
..*** காட்டும் அதிசயம் தீரவில்லை!
எண்ணா துறங்கும் கணமாயும் - எனக்கு
.. ****இன்பம் தருவன நூற்களே!


நூலோ அதன்பொருள் நுண்ணியதோ? - நான்
.. ***நுணங்கிடும் போதது நொய்ந்திடுமோ?
பாலோ தேனோ ஈடில்லை - இரவு
..**** பகலாய் பரவசப் படுத்திடுமோ?


சொற்கள் கற்பிக்கும் மௌனமவள்! - புதுச்
.. ****சுவையை கற்பதில் ஏற்றுபவள்!
பற்கள் பதியா தொருநிலையில் - இதழ்
..**** பதிக்கும் கலைபோல் பதிப்பவள்!


கண்டும் கேட்டும் உண்டுயிர்த்தும் - அவள்
.. ****கலையா எழிலை உற்றறிந்தும்
அண்டி அவளின் அரவணைப்பில் - மனம்
.. ****ஆழ்ந்து கிடக்க அலைபாயும்!


என்னவள்! நான்தான் இதழ்ச்சுகிப்பேன்! - முறை
.. ****எத்தனை ஆயும் இனிப்பெனக்கே!
பொன்னவள் நெஞ்சில் பெயரெழுதி - என்
.. ****பொறுப்பில் புதிதாய்த் துகில்கொடுத்தேன்!


“அதிரை கவியன்பன்” கலாம், அபுதாபி
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)