பேரீச்சம் பழம், குடும்பத்தின் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான பழம். கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.
நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும். மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.
பேரீச்சம் பழத்தைத் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது,பேரீச்சம்பழம். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.
முதியோருக்குப் பேரீச்சம் பழம் மிகச் சிறந்தது. பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும். பாலில் வேகவைத்து, பருகி வந்தால் இதய நோய்கள் வரவே வராது. இரவில் பேரீச்சங்காய்கள் மூன்றை நீரில் ஊறப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் அந்தக் காய்களைச் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தை வெளியில் எடுத்து விடும். உயர் ரகமான அஜ்வா பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், நல்ல உடற்கட்டைப் பெறுவதுடன், எந்த நோயுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது