2016 - தேர்தலில் இஸ்லாமியர் ஒருவருக்கு தமிழக முதல்வர் பதவியை வழங்க வேண்டும்!அனைத்து கட்சி தலைவர்களுக்கு தர்ஹா பேரவை மாநில நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் கடிதம்!

2

தமிழக தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவையின் மாநில நிர்வனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப், தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன், சி.பி.எம். மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பா.ம.க தலைவர் ராமதாஸ் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பாதவது: தமிழகத்தில் 2016-ல் நிறைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக சிறுபாண்மை சமூகமான ஒரு இஸ்லாமியருக்கு தமிழக முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவையின் சார்பாக தாங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

இந்த தமிழகம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும், கண்ணியமிக்க காயிதே மில்லத்தையும் பெற்றெடுத்த ஒரு புனித பூமி. இங்கே ஓர் சிறுபான்மை இஸ்லாமியருக்கு ஒரு முதல்வர் பதவியை ஒருமுறை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மக்களை வெறும் வாக்கு வங்கிக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதம் பொய்யாக்கப்பட்டு, சிறுபான்மையான முஸ்லிம்களுக்கும் அதிகாரம் வழங்குகிறோம் என்ற ஒரு நிலை ஏற்பட்டு சிறுபான்மை மக்களின் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, சமநிலை அடையும் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும். எங்கள் கோரிக்கையை தாங்கள் பரிசீலிக்கும் பட்சத்தில் தமிழக தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவையின் உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வருகின்ற தேர்தலில் தாங்கள் வெற்றிக்காக முழு மூச்சுடன் செயல்படுவார்கள். நாங்கள் பாடுபடுவோம், வெற்றி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். அது மட்டுமல்லாமல் தர்ஹாவின் அபிமானிகளையும் அணுகி இந்த வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக திகழ்ந்த காலம் உண்டு. அதேபோல இந்த நல்ல முயற்சிக்கும் தமிழகம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும். பெரும்பான்மை மக்களின் அரவனைப்பில் ஒரு சிறுபான்மையினரான இஸ்லாமிய முதல்வர் என்ற இந்த தத்துவம் தாங்களினால் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இவ்வாறு தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவை மாநில நிறுவனத் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மு.முகைதீன் பிச்சை

முத்துப்பேட்டை

Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. Arumaiyana pathevu
    peraikku vaalththukkal.
    baakkar shahebukku
    nanre,nanre,nanre

    ReplyDelete
  2. தர்ஹா பேரவை தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நியாயமான வேண்டுகோளை வைத்துள்ளீர்கள். இன்னும் தாங்கள் உறுப்பினர்களை அதிகம் சேர்த்தால் வேண்டும்.

    ReplyDelete
Post a Comment