அதிரையில் ADT நடத்தும் தாவா பயிற்சி

Editorial
0


சென்னை மாநகரில் மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் சார்பாக எண்ணற்ற தாவா அழைப்புகள், திருக்குர்ஆனை பரப்புதல், காது மற்றும் வாய் பேச இயலாதோருக்கு சிறப்பு தாவா நிகழ்ச்சிகள் என்றெல்லாம் நடத்தி மாற்றுமத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாம் குறித்த நல்லெண்ண வெளிச்சத்தை ஏற்றி வருவதை அறிந்திருப்பீர்கள்.


அதனடிப்படையில் கடந்த (22.05.2015) வெள்ளியன்று சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் கலந்து கொண்டு அதிரை தாருத் தவ்ஹீதின் பிலால் நகர் மர்கஸில் சிறப்பு தாவா வகுப்பை நடத்தினார்கள். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என கருத்து மேலோங்கியதன் தொடர்ச்சியாக இந்த வாரம் 29.05.2015 வெள்ளியன்று மஸ்ஜிதுல் முஃமீன் தாவா குழுவின் முக்கிய அழைப்பாளர்களில் ஒருவரான சகோதரர் அப்துல் ஹமீது அவர்களை கொண்டு கீழ்க்காணும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன இன்ஷா அல்லாஹ்.

அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்களின் 29.05.2015 வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நிரல்

1. ALM பள்ளிகூட பள்ளிவாசலில் ஜூம்ஆ உரை

2. அஸருக்குப்பின் பிலால் நகர் தர்பியா சென்டரில் பெண்களுக்காக வாராந்திர பயான்

3. மஃரிப் தொழுகையை தொடர்ந்து, தாவா என்றால் என்ன? ஏன் தாவா செய்ய வேண்டும்? எப்படி தாவா செய்ய வேண்டும்? என்ற பொருளின் அடிப்படையில் தாவா பயிற்சி ADTயின் பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

தாவா ஆர்வலர்கள், இளைஞர்கள், நண்பர்கள் குழு என அனைவரும் இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து பயனடைய வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறது.

அதிரை தாருத் தவ்ஹீத்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)