அதிரை வாய்க்கால் தெரு அருகே இன்று காலை மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்தது. இந்த மின் கம்பி அறுந்து கீழே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்த சமூக ஆர்வலர் ஷாகுல் ஹமீது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்.உடனே மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தார்.மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்ப்பட்டது.இதனால் ஷாகுல் ஹமீது மற்றும் அந்த பகுதி மக்கள் யாரையும் அந்த பகுதிக்குள் வராமல் பாதுகாத்தனர்.இறுதியாக மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து அறுந்து தொங்கி கொண்டு இருந்த மின்கம்பியை சரி செய்தனர்.
Advertisement






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎன்னுடைய தம்பி கிஜார் முஹம்மது வீடு இந்த மின் கம்பத்திற்கு அருகில் தான் இருக்குது, தற்போது தம்பி கிஜார் முஹம்மது அமெரிக்காவில் இருக்கின்றார்.
மின்வாரிய ஊழியர்கள் வர தாமதம் ஆகவே, வீட்டிலிருந்து தம்பிக்கு தகவல் போக, உடனே தம்பி இன்று காலை 9.30மணிக்கு தொலைபேசி வாயிலாக என்னை தொடர்பு கொள்ள, உடனே நான் மின்வாரிய அலுவலராகிய போர்மேன் திரு முருகேஷ் அவர்களுக்கு தகவல் கொடுக்க. மற்ற வேலைகள் சிறப்பாக முடிந்தது.
குறிப்பு:- அதிரையில் தற்போது மின்கம்பிகள் அதிகமான இடங்களில் அறுந்து விழுந்த வண்ணம் இருக்கின்றது. பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு.முஹம்மது அலியார்.