அதிரையில் ட்ரான்ஸ்பார்மர் டமார்! இரண்டு நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்!

Editorial
0

file image

அதிரை சுரைக்காய் கொள்ளை அருகே உள்ள பிள்ளை குளம் அருகே ஒரு ட்ரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து சுரைக்காய் கொள்ளை, சால்ட் லேன், பிள்ளைமால் தெரு, மக்தூம் பள்ளி தெரு, ஆப்பக்காரத் தெரு, சங்கத்துக் கொள்ளை, பழஞ்செட்டித் தெருவின் ஒரு சில மின் கம்பங்களுக்கு மின் பகிர்மானம் செய்யப்படுகிறது.

மிகவும் பழைய இந்த ட்ராஸ்பார்மரும், இப்பகுதிகளில் உள்ள மின்சார லைங்களும் பல வருடங்களாக பழுதாகிக் கொண்டே இருந்தன. இந்நிலையில் நேற்று முந்தினம் இந்த ட்ரான்ஸ்பார்மர் வெடித்தது. எந்த வித அசம்பாவிதமும் நடைப்பெறவில்லை என்றாலும் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரம்த்திற்க்குள்ளாகியுள்ளனர்.

அதிரை மின்வாரிய அதிகாரிகள் வேலைகளை செய்துவந்தாலும் காலதாமதம் ஏற்படுவதால் வீடுகளுக்கு மின் விநியோகம் செய்வதில் சிக்கல் நிலவியுள்ளது. தற்போது பழஞ்செட்டித் தெரு, ஆப்பக்காரத் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது என்றும் மேற்கூறப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் மின்விநியோகம்  செய்யப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)