நேற்று முந்தினம் ஜும்மா நாளன்று தமாமில் உள்ள ஒரு மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகாயமடைந்தனர்.
நாட்டையே உழுக்கிய இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த செய்திகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் புகைப்படங்களுடனும், வீடியோகளுடனும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த செய்திகளை அங்கு பணிபுரியும் நம்மவர்களும் அதிகம் பகிர்ந்திருந்தனர்.
சவூதியில் அங்குள்ளவர்கள் சமுக வலைதளங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்கானிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு செய்திகள் போன்றவற்றை சமுக வலைதளங்களில் பகிர்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் சவூதியில் பணிபுரியும் அதிரையை சேர்ந்த ஒரு நபர் நமது அதிரை பிறை நிர்வாகிக்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். எனவே அனைவரும் சற்று எச்சரிக்கையாக சமுக வலைதளங்களை உபயோகிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது