
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (04-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
3வது நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் அதிரை SSMG அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை வெங்கடேஷ்வரா அணி விளையாடியது. இதில் பட்டுக்கோட்டை அணி 2-1 என்ற கோல்கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA B அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை AVK அணி விளையாடியது. ஆட்ட முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்ற நிலையில் சம நிலையில் முடிவடைந்தது. இதனை அடுத்த டை பிரேக்கர் முறையில் பட்டுக்கோட்டை அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இரண்டு அதிரை அணிகள் விளையாடியதால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நாளைய தினம் MFC மேலநத்தம் அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை 7S அணியினர் விளையாட உள்ளனர்.
அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரின் தினசரி முடிவுகளை அறிய அதிரை பிறையுடன் இணைந்திருங்கள்.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது