இந்த ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. எப்பொழுதும் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் அதிகம் என ஊடகங்கள் செய்தி பெருமையோடு வெளியிட்டு வருகிறது. மாணவிகளுக்கு இது ஒரு இனிப்பான செய்தியாக இருந்தாலும் - நம்ம பசங்களுக்கு அது கொஞ்சம் ஜீரணிக்கமுடியாத செய்திதான். இனி ஒரு வாரத்திற்கு அதுவே பத்திரிக்கைகளின் தலையங்கமாகவும், தொலைகாட்சிகளில் விவாதங்களாகவும் இருக்கும் என்பதை நம்மால் பார்க்க முடியும். இவ்வாறான சூழலில் எந்த பத்திரிக்கையும் வெளியிட்டிராத, எந்த தொலைக்காட்சியும் அறிவித்திராத செய்தியை நான் இங்கு பதிவு செய்ய ஆசை படுகிறேன்.
STUDENT DETAILS AS FOLLOWS:
பெயர்: செய்யது முகம்மது புகாரி
ஊர்: மேலப்பாளையம், திருநெல்வேலி மாவட்டம்.
இருப்பிடம்: கோவை மத்திய சிறை, கோவை
வழக்கு: தடா வழக்கு மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்கு.
வழக்கு விவரம்: ஆயுள் தண்டனை சிறைவாசி
சிறையில் கைதியாக இருக்கும் காலம்: 3 ஆண்டுகள் தடா வழக்கிலும் 17 ஆண்டுகளாக கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் சிறையில் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் பல வருடங்கள் சிறைதுரயினரால் அதற்கு அனுமதிக்கப்படவில்லை. இறுதியாக இந்த 2015 ஆம் ஆண்டு பிளஸ் +2 பரீட்சை எழதும் வாய்ப்பை பெற்றார். எல்லோரையும் போல் இவரும் இன்று தன் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். காலையில் இருந்தே சிறை வார்டனை அழைத்து தன்னுடைய தேர்வு என்னை கொடுத்து முடிவுகளை அறிந்து வர சொன்னார். 10:30 மணியளவில் புன்னகைத்தப்படி புகாரி இருக்கும் அறைக்கு வந்த சிறை வாரடன் புகாரி அவர்களை பார்த்து கை குலுக்கியபடி பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். ஆம் புகாரி அவர்கள் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் மிக சிறந்த மதிப்பெண்களையும் பெற்று இருக்கிறார் (மதிப்பெண் பட்டியலின் புகைப்படம் கீழ் இணைக்கப்பட்டுள்ளது). மிக சிறந்த மதிப்பெண்களை பெற்றிருக்கும் செய்யது முகம்மது புகாரி அவர்களுக்கு நம் வாழ்த்துக்களையும் பதிவு செய்வோம்.
சிறந்த கல்வியறிவு பெற்றிருக்கும் இவரை போன்றோரை தமிழக அரசு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்திட முன்வர வேண்டும். கடந்த தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்திருந்த 1400க்கும் மேற்பட்ட கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றார்கள். அதுபோன்று ஒரு பொதுமன்னிப்பை புகாரி மற்றும் அவரோடு சிறையில் 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு அப்போதைய கலைஞர் அரசு வழங்கிடவில்லை.
17 ஆண்டுகள் ஆகியும் இவரின் விடுதலை கனவு வெறும் கனவாகவே இருக்கிறது. ஆயுள் தண்டனையின் காலம் வரையறுக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. சில மாநிலங்களில் ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளாக கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று ஒரு சட்டம் நம் தமிழகத்தில் இருக்குமானால் இவர் தன்னுடைய பிளஸ் +2 தேர்வை மேலப்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் எழுதியிருக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார்.
அவர் வாங்கிய மதிப்பெண்கள் .
தமிழ் - 174
ஆங்கிலம் -156
வரலாறு -188
பொருளியல் -181
வணிகவியல் -198
அக்கவுண்டன்சி -162
நன்றி : அபு உமா்
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது