அதிரையில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ வசதியை ஏற்படுத்தக்கோரி அதிரை பொதுமக்கள் சார்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பொதுமக்களால் பல முறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அதிரை மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை வழங்கினர். அதில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையானால் சாலை மறியல் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தால் சாலை மறியல் செய்வதற்க்கு அறிவிப்புகள் விளம்பரங்கள் செய்யப்பட்டன.
இதனை அடுத்து சுதாரித்துக்கொண்ட பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அதிரை மக்களை கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் அதிரை அரசு மருத்துவமனைக்கு விரைவில் 24 மணி நேர மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டு இரவு நேரத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார் என உறுதியளித்தனர். இதனை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்து பொதுமக்கள் அதிரை திரும்பினர். அதிரையின் சில வெப்சைட்டுகளிலும் அதிரைக்கு 24 மணி நேர மருத்துவ சேவை கிடைத்தது" என்றெல்லாம் செய்திகள் பதிந்தனர். இதை பார்த்த பொதுமக்களும் வெளிநாடு வாழ் அதிரைகளும் ஆறுதல் அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் உறுதியளித்தவாறு மருத்துவரை நியமிக்காத காரணத்தால் பொதுமக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அதிரை அரசு மருத்துவமனையின் எதிரில் துவங்கியுள்ளனர். காலை 9 மணியளவில் துவங்கிய இதில் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது