சவுதியில் தங்களது உயிரை கொடுத்து பலரின் உயிரைக் காப்பாற்றிய இரு கண்ணியவான்கள்

Irshad Bin Jahaber Ali
1

சவுதியில் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது மீண்டும் குண்டுவெடிப்பு நடைபெற்று நான்கு பேர் உயிரிழந்தனர்.


குண்டுவெடிப்பின் போது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தன்னுடைய உடலில் கட்டியிருந்த குண்டுடுடன் பள்ளிவாசலில் நுழைய முயற்சித்த போது முஹம்மது ஹசன் அலி, அப்துல் ஜலீல் அல் அர்பாஷ் ஆகிய இரு நண்பர்கள் தற்கொலைபடை தீவிரவாதியை கண்டு கொண்டார்கள்.

உடனே இரு நண்பர்களும் தீவிரவாதி பள்ளிவாசல் உள்ளே நுழைய முடியாதவாறு கார் பார்கிங்லேயே தடுத்து நிறுத்தி விட்டனர். அந்த நேரத்தில் தீவிரவாதியின் குண்டு வெடித்ததால் இரு நண்பர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

இரு நண்பர்களும் தீவிரவாதியை தடுத்திருக்காவிட்டால் தீவிரவாதி பள்ளிவாசலின் உள்ளே நுழைந்து குண்டை வெடிக்க வைத்திருப்பான், பலரது உயிர்களும் சிதறி இருக்கும்.

தங்களது உயிர்களை கொடுத்து பலரின் உயிர்களை காப்பாற்றிய இரு கண்ணியவான்கள்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
Post a Comment