நுங்கை, கோடை காலத்தில் சாப்பிடக் கிடைக்கும் ஒரு சுவையான உணவுப்பொருளாகத்தான் நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் நுங்கு ஒரு மருந்துப் பெட்டகம், வெயில் கொளுத்தும் கோடையில் நம்மைப் பாதுகாக்க இயற்கை அளித்துள்ள வரம்.
பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை.
அது போலத்தான் நுங்கும். குடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடியது இது. நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர், வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். செரிமான சக்தியை சிறப்பாக்கும். இதனால் சாப்பிடப் பிடிக்காமல் இருப்பவர் களுக்கு நல்ல பசி ஏற்படும்.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்த மருந்து.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கி விடும்.

ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் அந்தியூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
கோடை காலத்தில் பலரும் வியர்க்குருவால் அவதிப்படுவார்கள். அதற்கு நுங்கு ஒரு நல்ல மருந்து. நுங்கை வியர்க்குருக்கள் மீது பூசினால் அவை மறையும்.
இந்தக் கோடை காலத்தில் இளம் நுங்கு வாங்கிச் சாப்பிட்டு அதன் இனிய பலன்களைப் பெறலாம்!
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது