அதிரை மேலத்தெரு
சாணா வயல் பகுதியை சேர்ந்தவர் முஸ்தஃபா. இவர் தன்னுடைய மனைவியின் மருத்துவ பரிசோதனைக்காக
வீட்டை பூட்டி வைத்து விட்டு அருகில் உள்ள நபரிடம் வீட்டை கண்கானித்துக்கொள்ளுமாறு
சொல்லிவிட்டு சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் நேற்று வீட்டை
சென்று பார்க்கும் போது வீட்டு தாழ்பாழ்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனை முஸ்தபா
இன்று அதிரை வந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று ஆராய்ந்ததில் 45 பவுன்
நகை, 47 ஆயிரம் ரூபாய் பணம், லேப்டாப் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது தெரிந்து அதிர்ச்சியும்
வேதனையும் அடைந்துள்ளார்/. திருடர் வீட்டு காம்பவுண்ட் சுவற்றின் மீது ஏறி குதித்து
முன்பக்க கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து கொள்ளைடித்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து இன்று காவல் துறையினருக்கு புகார் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் வழக்கு
பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து
பாதிக்கப்பட்ட முஸ்தஃபா அவர்கள் அதிரை பிறையிடம் அளித்த பேட்டி
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது