இன்றுுதி.மு.க தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்களின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கட்சி கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிரையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலைஞரின் பிறந்த நாளினை கொடியேற்றியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிரை பேருந்து நிலையம், தி.மு.க கட்சி அலுவலகம், சேர்மன் வாடி,வண்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொடியேற்றி தங்கள் மகிழ்சியை வெளிபடுத்தினர். இதில் தி.மு.க நகர தலைவர் இராம.குணசேகரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், கவுன்சிலர்கள், அப்துல் காதர், அன்சர் கான், சரீப் மற்றும் தி.மு.க தொண்டர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.
Advertisement
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteகடந்த 25.05.2015 அன்று அதிரை நியூஸ் இணையதளம் அதிரையில் சாதனையாளர்கள் மற்றும் கல்வி விருது வழங்கும் விழா நடத்தியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அதிரையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். இதில் மகரிப் நேரத்தில் தொழுகைக்கு பாங்கு சொன்ன பிறகும் அதிரை நியூஸ் தொழுகைக்கு நேரம் விடாமல் தொடர்ச்சியாக விழாவை நடத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சவுதியில் ஒபாமா வருகை தந்திருந்த பொழுது மன்னர் அவர்கள் தொழுகை நேரம் வந்தயுடன் தொழுகைக்காக அமெரிக்க அதிபரை நிற்கவைத்து விட்டு சென்றார். ஆனால் இவர்களோ மகரிப் நேரத்தில் இடைவெளி உடாமல் தொடர்ச்சியாக விழாவை நடத்தி சென்றுள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக இந்த விழாவில் விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் உடனே விருதுகளை அவர்களிடமே திரும்பி கொடுத்துவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் அதிரை நியூஸ் இதற்காக இஸ்லாமியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுபற்றி நான் அதிரை நியூஸ் தளத்தில் கருத்து பதிவு செய்தேன் அனால் அவர்கள் செய்த தவறுகளை மறைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நீக்க நீக்க நான் 20 தடவை கருத்து செய்தேன் அதையும் நீக்குகின்றனர்.
இதில் தவ்ஹீத் கொள்கை கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தமுமுக போன்ற இஸ்லாமிய இயக்கங்களும் விருதுகள் பெற்றுள்ளனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது.