அதிரை 3ஸ்டார் ஜிம் புதிய கிளைக்கு வருகை தந்த பட்டுக்கோட்டை நகர தலைவர்! (படங்கள் இணைப்பு)

Editorial
3



 அதிரை 3 ஸ்டார் ஜிம்  ஆஸ்பத்திரி தெருவில் உள்ள சி.எஸ்.சி கணினி பயிற்சி மையத்தின் மேல் தளத்தில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல திறமையான உடற்பயிற்சி கலைஞர்களையும் உருவாக்கி வருகின்றது. இதன் இரண்டாவது கிளை கடந்த 1ஆம் தேதி நமதூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பழைய கனரா வங்கி மாடியில் இனிதே துவங்கியது.

இதனை பார்வையிட இன்று இரவு 8 மணியளவில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர் பாபு வருகை தந்தார். அதுசமயம் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி.மஹ்பூப் அலி மற்றும் உடற்பயிற்சி கலைஞர்கள் பலர் கலந்துக்கொண்டனர். மேலும் இங்கு உடற்பயிற்சி பயின்ற மாணவர்களின் கட்டுடலை பார்த்து பட்டுக்கோட்டை நகர தலைவர் ஜவஹர் பாபு வியந்து பாராட்டி சென்றார்.















Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

3Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    கடந்த 25.05.2015 அன்று அதிரை நியூஸ் இணையதளம் அதிரையில் சாதனையாளர்கள் மற்றும் கல்வி விருது வழங்கும் விழா நடத்தியது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் அதிரையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் இஸ்லாமிய ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டனர். இதில் மகரிப் நேரத்தில் தொழுகைக்கு பாங்கு சொன்ன பிறகும் அதிரை நியூஸ் தொழுகைக்கு நேரம் விடாமல் தொடர்ச்சியாக விழாவை நடத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சவுதியில் ஒபாமா வருகை தந்திருந்த பொழுது மன்னர் அவர்கள் தொழுகை நேரம் வந்தயுடன் தொழுகைக்காக அமெரிக்க அதிபரை நிற்கவைத்து விட்டு சென்றார். ஆனால் இவர்களோ மகரிப் நேரத்தில் இடைவெளி உடாமல் தொடர்ச்சியாக விழாவை நடத்தி சென்றுள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக இந்த விழாவில் விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் உடனே விருதுகளை அவர்களிடமே திரும்பி கொடுத்துவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் அதிரை நியூஸ் இதற்காக இஸ்லாமியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

    இதுபற்றி நான் அதிரை நியூஸ் தளத்தில் கருத்து பதிவு செய்தேன் அனால் அவர்கள் செய்த தவறுகளை மறைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நீக்க நீக்க நான் 20 தடவை கருத்து செய்தேன் அதையும் நீக்குகின்றனர். 

    இதில் தவ்ஹீத் கொள்கை கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தமுமுக போன்ற இஸ்லாமிய இயக்கங்களும் விருதுகள் பெற்றுள்ளனர் என்ற தகவல் வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete
  2. சகோ இதை நேரடியாக கேட்க வேண்டியதானே.

    ReplyDelete
  3. சகோ இதை நேரடியாக கேட்க வேண்டியதானே.

    ReplyDelete
Post a Comment