அமீரகத்தில் காணாமல் போன அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு...?

Editorial
2

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த கடிதத்தின் நோக்கம் யாருடைய மதையும் புண்பட செய்வது அல்ல எனது மற்றும் என்னை போன்றோரின் மனவேதனையை அதிரைவாசிகள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் மேலும் நடந்து விட்ட தவறுகள் இனிவரும் காலங்களில் சரி செய்யப்படவேண்டுமென்ற நோக்கில் இது எழுதப்படுகிறது.

அமீரகத்தில் காணாமல் போன அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு...?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்,தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்,தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும்,அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.

அதிரை வாழ் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அமீரகம் வாழ் அதிரைவாசிகளின் ஒற்றுமைபாதுகாப்பு மற்றும் சமூக அரசியல் நலன்களின் மேன்மைக்காக பாடுபடுவதும். அதிரை முஸ்லிம் சமூகத்தில் நிலவுகிற கருத்து வேறுபாடுகளை களைந்திடவும்ஒற்றுமையை வலியுறுத்தியும்மனிதநேயம்சமத்துவம்,சகோதரத்துவம் ஆகிய உயரிய குறிக்கோள்கள் மேன்மையுடன் வெற்றியடைய அல்லாஹ்வின் உதவியோடும்தூய எண்ணங்களோடும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே AAMF-ன் தலையாய நோக்கமாக கொண்டு கடந்த 30.09.2011 அன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டது அனைத்து முஹல்லா கூட்டமைப்பு.

கடைசியாக கடந்த 27.12.2013 அன்று துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தோடு அனைத்து முஹல்லாவிற்கு அறிவிக்கப்படாத மூடுவிழா செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களாக எந்த ஒரு செயல்பாடுமில்லாமல் செயல் இழந்து கிடப்பதன் காரணம் என்ன?

17 மாதங்களாக செயல்பாடு இழந்து காணப்பட்டதால் கூட்டமைப்பிலிருந்து அமீரக கடற்கரை தெரு முஹல்லா நிர்வாகம் அனைத்து முஹல்லா நிர்வாகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிப்பு செய்து வெளியேறிய உடனானவது விழித்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் அதிசயம் நடக்காமல் போனதன் மர்மம் என்ன?.

இதன் நிர்வாகிகள் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பதன் நோக்கம் தான் என்ன?

இதில் அரசியல் பின்னனி எதுவும் உண்டாஅரசியல்வாதிகளுக்காக முடக்கப்பட்டதா?

நிர்வாகிகளின் இயலாமையாஆம் எனில் அடுத்தோருக்கு வழிவிடாமல் இன்னும் ஏன் குறுக்கே படுத்திருக்க வேண்டும்?

தனி நபர்கள் மத்தியில் ஏற்படும் அற்ப கருத்து வேறுபாடுகள் ஏதும் காரணமா?

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை மாதிரி அவரவரின் பாழாய்போன தெரு பாசம் மீண்டும் உச்சத்தலையில் யாருக்காவது ஏறிக்கொண்டதா?

வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாமல்வெட்கப்படும்படியான காரணங்கள் ஏதுமிருக்கின்றதா?    

இந்த நிலை நீடித்தால் விரைவில் அனைத்து முஹல்லாக்களும் இதிலிருந்து வெளியேறும் நிலை தான் வரும்மென்பதில் சந்தேகம் கிடையாது. மீண்டும் இப்படி ஒரு உன்னதமான கூட்டை கட்டுவதென்பது சாத்தியப்படாமலேயே போகலாம்.

எனவேஅமீரக அனைத்து மஹல்லா நிர்வாகிகளின் கவனத்திற்கு அல்லாஹ்வுடைய கலாமை கொண்டும் அவனது ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையை கொண்டும் இறுதியாக எச்சரிக்க விரும்புகிறோம்.

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்: 5:92.

(வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லைஎனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டுஅவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும். அல்குர்ஆன்: 6:69.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள்தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்துஅதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். நூல்: முஸ்லீம் 3729.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டுகருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது. பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, 'மக்களே என்னருகே வாருங்கள்" என்றதும் மக்கள்அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு 'அம்மா பஃதுஎனக் கூறினார்கள். அதன் பின்னர் 'மற்ற மக்கள் பெருகும்போதுஇது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ,தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி 927.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), 'நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.என்று கூறினார்கள். அவர் 'இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?' என்று கேட்டதற்கு '(ஆட்சியதிகாரம்நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்'என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: புஹாரி 6496.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன்தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண்தன் கணவனின் வீட்டாருக்கும்அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.

சிந்திக்கும் மனிதர்களுக்கு இவையே போதுமானது.

இன்ஷா அல்லாஹ்அதிரை அனைத்து முஹல்லாவின் அமீரக கிளை மீண்டும் விரைவில் கூடும் என்ற நம்பிக்கையுடனும்இயலாதோர் இளையோருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வர் என்ற நன்நம்பிக்கை கொண்டவர்களாக நிறைவு செய்கின்றோம்.

மன வேதனையோடு

என்றும் அன்புடன்
K.M.N. முகமது மாலிக்
அமீரக அனைத்து முஹல்லாவின் தாஜுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்
என் அலைபேசி : 0097150 -7914780
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. விருது கொடுக்கிறோம் என்ற பெயரில் மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் புகழ்ச்சி பாடிய அதிரை நியூஸ் நிர்வாகிகளுக்கு நன்றி... இனியும் இதுபோல் ஊரை ஏமாற்ற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அதிரைநியுஸ்விருதுவிழாவில்எல்லமதத்தினரும்இருந்தார்கள்நிஜாம்க்குநண்றி

    ReplyDelete
Post a Comment