அதிரை கடற்கரைத்தெரு ரேசன் கடையில் தொடரும் மோசடிகள்! (ஆதார படங்கள் இணைப்பு)

Editorial
0
அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி அருகில் உள்ள ரேசன் கடையில் 8,9,10 ஆகிய வார்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக ரேசன் பொருட்களை அங்குள்ள ஊழியர்கள் மக்களுக்கு சரி வர விநியோகிக்கவில்லை என்ற புகார் எழுந்து வருகிறது.  கடந்த 4 மாதங்களாக மக்களுக்கு உளுந்து வழங்கப்படவில்லை என்றும், வழங்கப்படும் பொருட்களில் எடைகள் குறைவாக இருப்பதாகவும், புகார் வருகிறது. 

இது குறித்து கேட்கும் பொதுமக்களையும் ஏசிபேசுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இந்த பிரச்சனை குறித்து TSO விடம் புகார் அளித்துள்ளதன் அடிப்படையில் அவர் வருகை தருவாதாக கூறி இருந்தார் ஆனால் அவர் இன்னும் வரவில்லை என்றும் இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களுக்காக வழங்கப்படும் ரேசன் பொருட்களை தீர்ந்து விட்டதாக மக்களை அனுப்பி விட்டு ரேசன் கடை ஊழியர்கக் அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)