அதிரையில் திருந்தாத சிலர்! வருந்தும் பலர்! (படங்கள் இணைப்பு)

0
புதுமனைத் தெருவில் உள்ள முக்கிய குறுக்கு சந்தில் பல நாட்களாக குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வந்தனர்.  இவற்றை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பேரூராட்சியில் புகார் தெரிவித்து அங்கு குப்பை கொட்ட தடை விதிக்கப்பட்டது. 

எனினும் தடைகளை மீறி அங்கு அசுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.  எனவே அக்கம் பக்கத்தினர் முயற்சியில் அதே தெருவில் வீட்டு காவலில் ஈடுபடும் காவலாளி ஒருவர் குப்பைகளை அகற்றி அங்கு செடிகளை அமைத்து வேலி அடைந்துள்ளார்.

நீங்க என்ன தான் சொன்னாலும் நாங்கள் திருந்தவே மாட்டோம் என்பது போல் வேலிக்கு அப்பால் மீண்டும் குப்பைகளை கொட்டியுள்ளனர்.  நாம் என்ன தான் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கென செயல் படுவோரிடம் என்ன தான் சொல்லி திருத்துவது...

குறிப்பு:

இந்த தெருவில் வேலை செய்யும் வேலையாட்கள் தான் இது போன்று அத்துமீறுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். 

எனவே வீட்டு ஆட்கள் வேலையாட்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)