பரிதாபமான நிலையில் அதிரை, கண்ணீரில் அதிரை விவசாயிகள்

0


காற்றழுத்த தாழ்வுநிலையும், பருவமழையும் காவிரி டெல்டாவின் கடற்கரை மாவட்டங்களை அச்சுறுத்தி வரும் நிலையில், மறுபுறத்தில் அதே கடற்கரை பகுதியான அதிராம்பட்டினம் பகுதியில் தண்ணீர் இன்றி 1,500 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். 

அதிராம்பட்டினம் பகுதியில் மழை பெய்யாத நிலையில் கல்லனைக் கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்படாததால், சம்பா பயிரை காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள முதல்சேரி, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, பழஞ்சூர், அணைக்காடு, ராஜாமடம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மஞ்சவயல், தாமரங்கோட்டை, மன்னாங்காடு, காசாங்காடு, புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல்வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன.

"கடற்கரைப் பகுதியும், மாவட்டத்தின் கடைமடைப் பகுதியுமான அதிராம்பட்டினம் உப்பு உற்பத்தி, மீன் பிடித்தல், நெல் சாகுபடி, தேங்காய் உற்பத்தி என வளமுடன் இருந்து வந்தது. ஆனால் கடந்தாண்டும், நிகழாண்டும் மழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளங்கள் வறண்டதுடன், நலத்தடி நீரும் மிக ஆழத்துக்கு சென்று விட்டது. இதனால், இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் வற்றாத குளங்கள் என்று அழைக்கப்படும் செடியன் குளம், செக்கடிக் குளம், ஆலடிக்குளம், மன்னப்பன் குளம், கரிசமணி ஆகியவை தற்பொழுது சிறுவர் கிரிக்கெட் விளையாடும் மைதானங்களாக மாறிவிட்டன" என்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னால் முதல்வர் அப்துல் காதர் அவர்கள் கூறுகிறார்கள்.

 " தண்ணீர் கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளதால், ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே மேற்கொள்கிறோம். கடந்தாண்டு வறட்சி காரணமாக சம்பா பயிர்களும் பாதியிலேயே கருகிவிட்டன. அதற்கான நிவாரணம் இன்று வரி கிடைக்கவில்லை. நடப்பாண்டும் தண்ணீர் இன்றி பயிற்கள் கருகி வருகின்றன. குறிப்பாக  ஆண்டுகளாக மாடுகளுக்கு வைக்கோல்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாத நிலையில் கல்லணைக் கால்வாயில் தண்ணீரைத் திறந்துபவிட வேண்டிய பொதுப்பணித் துறை அலுவலரின் பாரபட்சமான நடவடிக்கையால் இந்தப் பகுதி விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம்" என்கிறார் மருதங்காவயல் ஆரோக்கியராஜ் அவர்கள்.

"ஈச்சவிடுதியில் இருந்து புதுப்பட்டினம் 8,9 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடாமல் புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி வாய்க்காளுக்குத் தண்ணீரை மாற்றித் திறந்து விடுவதால் இந்தப்பகுதியில் விவசாயம் செய்யும் 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரின்றி வறண்டு, நாற்றுகளை ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றன" என்கிறார் நடுவிக்காடி ரங்கசாமி.

நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் வைவசாயம் மட்டுமின்றி மக்களும், கால்நடைகளும் பரிதாப  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி சம்பா நெல் பயிர்களைக் காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிராம்பட்டினம் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.



thanks to:  the hindu (tamil)  kathiravan

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)