வெளிநாட்டு வாழ்க்கை - அதிரையர்களுக்கு சமர்ப்பணம்

1


வெளிநாட்டு வாழ்க்கை ! நாங்களே தேடிக்கொண்ட சிறை

* பொருளீட்ட பொருளிழந்து கடல் கடந்து வந்தோம் !

* உறவுகளை பிரிந்து உயிருள்ள ரோபோவாய் வாழ்கிறோம் !

* உயிரெல்லாம் உங்களுடன் வைத்துவிட்டு உணவென்று எதையோ உண்டோம் !

* பிள்ளைகளின் முகங்களை பார்க்க Skypeன் முன் தவமாய் தவமிருந்தோம் !

* மனைவியின் குரலை கேட்க மொபைல் போன் எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோம் !

* இத்தனையையும் தாங்கிய பின் கையில் கிடைக்க போகும் சம்பளத்திற்காக ஏங்குவோம் !

* சீ ! இதுதானா வாழ்க்கை என்று ஒவ்வொரு நாளும் கவலையுடன் தூங்குவோம் !

* அன்னைமண் ஒரு வேலை கொடுத்திருந்தால் இப்படியா இன்னொருவனிடம் அடி வாங்குவோம் !

* அடுத்த தலைமுறையாவது அயல் நாட்டில் வேலை தேடாமல் அன்னை மண்ணில் உழைத்து ஆணவத்துடன் வாழ்வோம் !

வெளிநாட்டு வாழ்க்கை அதிரையர்களில் பலர் அயல் நாட்டில் படும் கஷ்டம். இங்குள்ள மனைவி மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டில் கடினமாக உழைத்து பணம் அனுப்புகிறனர். ஆனால் சில குடும்பங்களில் பணத்தை சேகரிக்க தெரியாமல் வீண் விரையம் செய்கின்றனர் . சிறு பிள்ளைகள் கையில் செல்போன், மோட்டார் மைக் போன்ற வற்றை கொடுத்து. 

அவர்களுக்கு குடும்ப நிலை தெரியாமல் வளர்த்து பிற்காலத்தில் ஏற்ப்பாடு சிறு கஷ்டத்தையும் தாங்க முடியாதவர்களாக ஆகின்றார்கள். சிலர் உள்ளுரில் வேலை செய்பவர்களை ஏளனமாக கருதுகின்றனர். ஆனால் அவர்கள் சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் அவர்களின் இல்லத்தில்  மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். 

வேறு சிலர் கூறுவார் நாங்கள் வெளிநாட்டில் நன்றாக இருக்கிறோம் என்று. ஆனால் பலரின் நிலை பிகவும் கடிணமாக அமைந்திருக்கின்றது.

         

இனியாவது சிக்கனத்தை கையாளுவோம்.. சிந்தித்து செயல்படுவோம்.



தொகுப்பு: அதிரை சாலிஹ்




Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இந்த நிலைமையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். பிற்காலத்திலும் வெளிநாட்டை நம்புவது முட்டாள் தனம். இனி வரக்கூடிய இளைஞசர்கலாகிய நீங்கள் தான் இதனை மாறி அமைக்க வேண்டும்.

    தகவலுக்கு நன்றி. . அதிரை பிறை

    ReplyDelete
Post a Comment