அந்த கொண்டாட்டம் நேற்றோடு முடிவுற்று நிலையில் இன்று (30.8.2014) நாகூர் மீனவ சமுதாயத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களுமாக மதகுருக்கள் உட்பட நாகூர் தர்காவிற்கு சொந்தமான யானை ஒன்று அவர்களை வழிநடத்தி சென்றனர்.
மேல தாலத்தோடு இதுவரை எந்த வருடமும் இல்லாமல் அடர்ந்த முஸ்லீம் சமுதாயம் வாழும் மீயான் தெரு எனும் தெருவில் உள்ள ஹிளுறு பள்ளி எனும் பள்ளிவாசல் வழியாக சரியாக மகரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் கடந்து செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்த ஒரு சில முஸ்லீம் சமுதாயத்து இளைஞர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உங்களுக்கு இவ்வழியே செல்ல அனுமதி கொடுத்தது யார்? என்று வினவ அதற்கு சிலர் ஏதோ கூற….
இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த இரு சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து வழக்கத்துக்கு மாறான விபரீதத்தை உருவாக்கிய இந்த ஊர்வலம் குறித்தும், இதனை பற்றி நாகூர் காவல்துறை மற்றும் உளவுதுறையின் கவனமின்மையை சுட்டிக்காட்டும் வண்ணமும் காவல் துறையிடமே முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் புகார் மனு ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்கள்.
காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்ற இந்த இடைப்பட்ட நேரத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனையில் பள்ளி வாசலுக்கு அருகே வந்து, யாருடா அனுமதி இல்லை என்று தடுத்தது என்று கேட்க…. இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, இரத்த காயங்கள் ஏற்பட்ட இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் நாகூர் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
தகவல். நாகூர் தீன்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது