அதிராம்பட்டினத்தில் பெண் மாயம்!

0


அதிராம்பட்டினத்தை அடுத்த நடுவிக்காடு கிராமம் ராஜா மடம்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் இவரது மகள் தேன்மொழி (வயது 26), இவர் கடந்த 13–ந் தேதி வெளியில் சென்று வருவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.

அவரது தந்தை வடிவேல் அவரது செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மகள் தேன்மொழி கிடைக்காததால் இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)