அன்றாட வாழ்வில் ஆபத்தான விசயங்கள்!

Editorial
0

நல்ல பழக்கங்களுக்கு நிகராய் தீயப் பழக்கங்களும் நிரம்பிக் கிடக்கின்றன. அதிலும், பெரும்பாலானோர் அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் செயல்களினால் ஏற்படும் எதிர்வினை விளைவுகள் பற்றி தெரியாமலேயே செய்து வருகின்றனர்.

உதாரணமாக, ஃபிரிஜ்ஜில் நீண்ட நாள் வைத்த உணவுகளை பயன்படுத்துவது, பிளாஸ்டிக் உபகரணங்களில் உணவினை அடைத்து வைப்பது, பாத்திரம் தேய்க்கும் ஸ்பான்ஜினை வெகு நாட்கள் பயன்படுத்துவது என உங்களது அன்றாட வாழ்வியல் சார்ந்த பல பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இனி, ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் உங்களிடம் இருந்து தூக்கி எரிய வேண்டியவைப் பற்றிப் பார்க்கலாம்...

1.பிளாஸ்டிக் உபகரணங்கள் பைசெஃபெனால் - ஏ (Bisphenol A)

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பிளாஸ்டிக் உபகரனங்களில்லும் பைசெஃபெனால் - ஏ எனும் நச்சுப்பொருளின் கலப்பு இருக்கிறது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடிய நச்சு ஆகும். நாள்பட வருட கணக்கில் நீங்கள் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் உபகரணங்களில் அடைத்து சாப்பிடுவதனால் ஆண்மைக் குறைவில் இருந்து புற்றுநோய் வரையிலான பாதிப்புகள் ஏற்படும் வாய்புகள் அதிகமாக இருகின்றது.


2.ஏர் ஃபிரஷ்னர்

உங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் உபயோகப்படுத்தும் ஏர் ஃபிரஷ்னர் சுவாசக் கோளாறுகளில் இருந்து, இனப்பெருக்கப் பிரச்னை வரை ஏற்பட காரணமாய் இருக்கின்றது. அதிலும், விளம்பரங்களில் கூறுவதை போன்ற, நீண்ட நேரம் நல்ல நறுமணம் தரும் வல்லமையுடைய ஏர் ஃபிரஷ்னர்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

3.ஆன்டி-பாக்டீரியல் சோப்பு

நீங்கள் நினைப்பதை போல ஆன்டி- பாக்டீரியல் சோப்பு கிருமிகளைக் கொள்ளும் திறன் கொண்டவை அல்ல என்று உலக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை கூறியுள்ளது. அவை சாதரணமான விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையை மட்டுமே கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மற்றும் இவற்றில் பயன்படுத்தப்படும் இராசயனங்கள் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

4.டயட் சோடா

டயட் சோடா குடிக்கலாம், இது உடல் நலத்திற்கு நல்லது என்று விளம்பரம் செய்யப்படுகின்றன. ஆனால், அதில் கலப்பு செய்யப்பட்டிருக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட காரணமாய் இருக்கிறது.

5.டூத் பிரஷ்

குறைத்து இரண்டு மாதத்திற்கு ஒருமுறை உங்களது டூத் பிரஷை மாற்றி விடுங்கள். அதில் இருக்கும் பிரிஷில்ஸ் பாக்டீரியா பாதிக்கப்புகளை உண்டாக்கும்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)