அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்தது அதிரை சிட்னி அணி! (படங்கள் இணைப்பு)

Editorial
0
அதிரை மேலத்தெரு WCC நடத்தும் 19ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் மேலத்தெரு மருதநாயகம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றது. கிரிக்கெட் கவர் பந்தில் நடைபெறும் இத்தொடர் போட்டியில் அதிரையின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் கலந்துக்கொண்டு விலையாடி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற கிரிக்கெட் லீக் சுற்று போட்டியில் அதிரை சிட்னி அணியை எதிர்த்து அதிரை PCC அணி களமிறங்கியது. இதில் முதலில் அதிரை பழஞ்செட்டித் தெரு பேட்டிங்க் செய்ய துவங்கியது. துவக்கத்தில் இருந்தே சிட்னி அணி பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி எதிர் அணியின் ரண் சேர்க்கையை தடுத்தனர். அபாரமாக பந்து வீசிய சிட்னி அணி பந்து வீச்சாளர் அபுதாஹிர் எதிர்அணி பேட்ஸ்மங்களை வந்தவேகத்தில் அவுட் செய்து வெளியேற்றினர். அபாரமாக பந்துவீசிய அபுதாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி குறைவான ரண்களை விட்டுக்கொடுத்தார். இறுதியாக அதிரை PCC அணி 108 ரண்களை குவித்தனர்.

109 ரண்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை சிட்னி அணியினர் துவக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். துவக்க மட்டையாளராக களமிறங்கிய முபாரக் அதிரடியான 3 சிக்சர்களை விளாசி வெற்றிக்கு உதவினார். இறுதியாக சிட்னி அணி 109 ரண்களை குவித்து இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிகபட்சமாக சிட்னி அணி வீரர் ரியாஸ் அஹமது அவர்கள் குறைந்த பந்துகளை சந்தித்து 35 ரண்களை குவித்தார்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)