பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் மற்றும்
மாணவியான பாலஸ்தீனைசேர்ந்த லினா கத்தாப், ஆறு மாதங்களுக்கு முன்னர் (13 December,
2014) மாணவர்கள் போராட்டம் ஒன்றில் கல்லேறிந்ததாக குற்றம் சாட்டபட்டு இஸ்ரேல் இராணுவத்தினரால்
கடத்திச் செல்லபட்டு எந்தவித தகவலும் இல்லாத இடம் ஒன்றில் சிறை வைக்கபட்டு இருந்தார்.
இவர் கைது செய்யபட்டது தொடர்பில் சமூக
வலைகளில் போராட்டங்கள் வெடிக்கவே இந்த சம்பவம் உலகின் ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு
செல்லபட்டது.
அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் அவர்
சம்பந்தப்பட்ட விபரங்கள் இஸ்ரேல் அதிகாரிகாரிகளால் வெளியிடபட்டு அவருக்கு $1560 அபராதமும்
6 மாத சிறைத்தண்டனையும் விதித்தனர். லினா கத்தாப்பிற்கு ஆதரவாக கோஷங்கள் வலுப்பெற்று
வந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் விடுதலை செய்யபட்டார்.
ஆறு மாதங்களாக தனது வாழ்வை சிறையில் கழித்த
இவரைபாலஸ்தீனியர்கள், அவரது குடும்பம் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் துல்க்காரெம்மில்
வடக்கு மேற்குக்கரை நகரமான, Jabara வீதித் தடையில் வைத்து தனது வரவேற்பதை படங்களில்
காணலாம்.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது