விறுவிறுப்புடன் நடைபெற்ற இன்றைய கால்பந்தாட்டத்தில் இறுதி போட்டியில் நுழைந்த அதிரை AFFA அணியினர் !

Heart2write
0
அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] நடத்தும் ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் கடந்த [ 10-05-0213 ] முதல் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள
மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
தொடர்ந்து பரப்பரப்பாக நடைபெற்ற வந்த போட்டியில் இன்றைய அரையிறுதி ஆட்டமாக வலுவான அணிகளாகிய அதிரை AFFA அணியினர் மற்றும் தஞ்சை நேதாஜி அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்த வந்த ஆட்டத்தின் இறுதியில் அதிரை AFFA அணியினரின் நட்சத்திர வீரர்கள் தாரிக் மற்றும் ராஜிக் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற உதவினர்.
நாளை [ 24-05-2013 ] நடைபெற இருக்கிற இறுதி போட்டியில் தஞ்சை அருள் அணியினரோடு அதிரை AFFA அணியினர் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பரிசளிப்பும் நடைபெற உள்ளது
ஆட்டம் துவங்குவதற்கு முன்னதாக இன்று அதிரையில் வஃபாத்தான முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், தமிழக வேளாண் விற்பனைத்துறையின்  ஆய்வாளரும், அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி C. முஹம்மது இப்ராஹீம் அவர்களுக்கு ஒரு நிமிட நினைவு கூறப்பட்டது.

பெரும் திரளாக கலந்து கொண்ட கால்பந்தாட்ட ஆர்வலர்களின் மஃஹ்ரிப் தொழுகைக்குரிய ஏற்பாடுகளை அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] குழுவினரின் சார்பாக விளையாட்டு மைதானத்திலேயே செய்யப்பட்டு இருந்தது.



Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)