கோடையில் உணவு ஜீரணமாவது சற்றே சிரமமானது. கோடையில் காரமாகவும், அதேசமயம் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையும் எடுத்துக்கொள்வது அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கோடைகாலத்தில் காரம்,
புளிப்பு, உப்பு போன்ற சுவைகளை தவிர்க்கவேண்டும். அதேசமயம் . இந்த சுவைகளால் பித்தம் சாந்தமடைகிறது. எனவே கோடையில் உண்ணவேண்டிய எளிதான ஆரோக்கிய உணவுகளை பட்டியலிட்டுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
மிதமான உணவு
கோடையில் மிதமாக உண்ணுங்கள் இதனால் ஜீரண உறுப்புகள் எளிதாக உணவுகளை ஜீரணித்து சத்துக்களாக மாற்றும். நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும். இதனால் பசி தூண்டும். அதேபோல் கீரை வகைகளை சாப்பிடலாம்.
இனிப்பான பழங்கள்
பழவகைளில் இனிப்பானவை நல்லது. மலைப்பழம், பூவன்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை ஆகியவற்றின் பழரசங்களை பசிநிலைக்குத் தகுந்தவாறு குடித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவேண்டும்.
துவர்ப்பு சுவை காய்கள்
துவர்ப்புச் சுவைகொண்ட வாழைப்பூவை வடைகறி செய்து சாப்பிட்டால் பித்த சாந்தியும், ரத்த சுத்தியும் ஏற்படும் வாரத்திற்கு இருமுறையாவது கோடையில் வாழைப்பூவை உணவில் சேர்க்க வேண்டும். அதுபோல நீர் காய்களாகிய வெள்ளரிக்காய், புடலங்காய் பூசணிக்காய் போன்றவற்றை கூட்டு போல் (தேங்காய், மிளகு, ஜீரகம் பொடித்து சேர்த்த) செய்து சாப்பிடவேண்டும். தண்ணீரைக்கூட மண்பானையில் ஊற்றி குடிக்கலாம் உடல் சூடு குறையும்.
வெள்ளரிக்காய்
தினசரி உணவில் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி போன்றவைகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சி, கொத்தமல்லி, உள்ளிட்டவைகளை உணவு ஜீரணத்திற்காக சேர்த்துக்கொள்ளலாம். இதனால் கோடையில் சூட்டினால் ஏற்படும் வயிறு கோளாறுகள் தவிர்க்கப்படும்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது