அதிரை அன்றும் இன்றும் (வனிகம் மற்றும் பொருளாதாரம்)

0


அதிரை மக்கள் பாரம்பரியமாக வனிகம் மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்கினர்.அவர்கள் இவை இரண்டிலும் பின்னிப் பினைந்திருந்தனர்.அவர்கள் தங்கள் வனிகத்தை கடல் வழியாக மரக்கலம் மூலம் பக்கத்து நாடுகளான இலங்கை,பர்மா,மலேசியா.சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தங்கள்வியாபாரத்தை மிகவும் சிறப்பாக செய்து நல்ல பொருள் வலம் அடைந்தனர்.

அவர்கள் மரக்கலத்தை வைத்து வனிகம் செய்த்தால் அவர்களை மரக்கலாயர் என்று அழைத்து வந்தனர்.அதனால் தான் காலப் போக்கில் இன்று மக்கள் நம்மை மரைக்காயர் என்று அழைக்கின்றனர்.
      
        இந்திய சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலக் கட்டத்தில்,நமதூரின் பல ஆண்கள் பொருள் ஈட்டுவதற்க்காக அரேபிய நாடுகளுக்கு சென்று பொருள் தேடினர்.தற்போதைய காலக்கட்டத்தில் நமதூர் மக்களின் முக்கிய பொருள் ஆதாயமாக வெளிநாட்டு உழைப்பு உள்ளது.
      
        அடுத்ததாக நமதூர் மக்களின் முக்கிய வியாபாரமாக தேங்காய் வியாபாரம் உள்ளதுஅதிராம்பட்டினம் தேங்காய் என்றால் அனைவருக்கும் விருப்பம்,அப்படி ஒரு தனிச் சுவையைக் கொண்டது நமதூர் தேங்காய்.
       
        நமதூர் மக்கள் கடந்த 20-30 ஆண்டுகளாக சென்னையில் குடியேறி அங்கேயே வசித்து தங்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
       
       தற்போது பெரும்பான்மையான மக்கள் உள்ளூரிலேயே இருந்து செய்வது நிலத் தரகர் (REAL ESTATE).நமதூர் மக்களின் பெரும்பான்மையானவர்களின் முதலீடும் இதுவேயாகும்.
       
       அதிரையில் உள்ள இளைஞர்கள் தற்பொழுது காலத்திற்கேற்ப்ப கனினி தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்து விளங்கிவருவது நமதூரில் இயங்கும் இணையதளங்கள் மற்றும் BROWSING CENTER கள் மூலம் நாம் அறியலாம்.எனவே நாம் அனைவரும் தொழில் நுட்பத்தில் ஆர்வமாக இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.அப்போது தான் அடுத்த உமர் தம்பி நம் ஊருக்கு கிடைப்பார்.

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)