சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் மறைந்துபோகும் லக்கேஜுகள்

1

சவூதி ஜித்தாவில் இருந்து வரும் அனேக விமானக்களில் ஹஜ், உம்ரா வரும் ஹாஜிகள் செல்கிறார்கள். அல்லாஹ்வின் விருந்தாளிகளாக வரும் இவர்கள் தங்கள் கடமையை முடித்து உறவினர்களுக்கு பரிசளிக்க என்று வாங்கும் பொருட்கள் சொல்லி தீராது. ஒவ்வொருவரும் அதிகபட்ச பொருட்களை கொண்டு வந்து விமான நிலைய அதிகாரிகளிடம் கெஞ்சிக்கொண்டிருப்பது அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டது

மேலும் அங்கிருந்து வேலை செய்யும் பணியாளர்கள் விடுமுறையில் தாயகம் செல்லும்போது அவர்களும் அதிகபட்சமான எடையை கொண்டு வந்து கெஞ்சிக்கொண்டிருப்பதும், முடியாதபட்சத்தில் 50 ரியால் பொருளுக்கு 60 ரியால் பொதி கட்டணம் செலுத்தி கொண்டுவருவதும் அன்றாட நிகழ்ச்சியே. பொதுவாக ஒருசில நாட்கள் தவிர ஜித்தாவிற்க்கு வந்து செல்லும் விமானங்கள் முழு இருக்கைகளும் பூர்த்தியாகவே வரும்

விமான பயணிகளுக்கு தலா 40 கிலோ வரை பொதிகளை கொண்டு வரலாம், அதுவும் 2 பெட்டிகளாக இருக்க வேண்டும் என்று விமான நிறுவனக்கள் நிர்ணயித்துள்ளது. அதாவது தலா ஒருவருக்கு 40 கிலோ மற்றும் 2 பெட்டிகள் இருக்கலாம் என்று ஆனால் ஒவ்வொருவரும் தலா 50 முதல் 60 கிலோ வரை 3 அல்லது 4 பெட்டிகளை கொண்டு வருகின்றனர்

இதனால் விமானத்தில் பொதிகள் வைக்க்கும் இடம் முழுமையான பயணிகளின் பொதிகளை நிரப்பும் முன்பே இடம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. அதனால் மிச்சமாகும் பெட்டிகளை அடுத்துவரும்விமானத்தில் அனுப்பி வைக்கின்றனர். பின்பு அந்த விமானத்தில் வரும் பயனிகளின் பொதிக்கும் அதே நிலை. இது ஒரு தொடர்கதை.

எனவே ஹாஜிகளும் சரி, பணிக்கு சென்றவர்களும் சரி தலா 40 கிலோ, 2 பெட்டிகளை மட்டும் கொண்டு வந்து உங்கள் பொருட்கள் பத்திரமாக உங்களுடன் வர முயற்ச்சி செய்யுங்கள். இதில் உம்ரா ஹாஜிகள். ஜம்ஜம் தண்ணீரை தலா இரண்டு மூன்று பாட்டில்கள் என்று கொண்டு வந்து விமான பொதியை அதிகப்படுத்தி இடத்தை அடைப்பது தனிக்கதை. பணியாளர்கள் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஹாஜிகளுக்கு அவர்களை அழைத்துவரும் நிறுவனத்தினர் கண்டிப்புடன் சொல்லி இதனை தவிர்க்க சொல்லவும்.

இனி வருபவை விமான பயணிகள் அனைவருக்கும் பொதுவானவை.

பொதுவாக ஊருக்கு வருபவர்கள் தங்களை அழைத்து செல்ல ஊரில் இருந்து கார் கொண்டுவரச்சொல்வது அதிகமாக உள்ளது. இது தேவை அற்ற வீண் செலவு. விமானம் இறங்கும் நேரத்தில் இருந்து சுமார் 3 மணி நேரம் கழித்து புறப்படும் ரயில் அல்லது பஸ்களில் ஆனலைன் மூலம் (இதற்க்கு க்ரெடிட் கார்டு தேவை இல்லை, டெபிட் கார்டு போதுமானது) உங்கள் டிக்கெட்களை பதிவு செய்து கொண்டு சம்மந்தப்பட்ட இடங்களுக்கு விமான நிலையத்தில் உள்ள கால் டாக்ஸி மூலம் சென்றுவிட்டால் உங்கள் பயணம் பாதுகாப்பாகவும், செலவு குறைவானதாகவும் ஆகும்.
பஸ் டிக்கெட் புக் செய்ய www.redbus.in/ என்ற தளமும், ரயில் டிக்கெட் புக் செய்யhttps://www.irctc.co.in/ என்ற தளமும் சென்றால் போதும்.

மேலும் பெண்களை தனியாக விமான பயணத்தில் அனுப்பும்போது உங்களுக்கு நம்பிக்கையான உறவினர்களோ, நண்பர்களோ செல்லும்போது அவர்களுக்கு துணையாக அனுப்பவும், அப்படி சென்றால் இதுபோன்று விமான பொதி வராமல் இருக்கும் சமயத்தில் அவர்களுக்கு உதவ ஏதுவாக இருக்கும். ஏனென்றால் 17-1-2014 எங்கள் பொதிகள் வராது, புகார் கொடுக்க நாங்கள் நின்ற சமயத்தில் தனியாக வந்த பல பெண்கள் செய்வதறியாது நின்றதை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.

சரி இப்பொழுது உங்கள் பொதி வராமல் போனால் என்ன செய்வது என்று பார்ப்போம்.

விமான நிலையத்திலேயே நீங்கள் வந்த விமானத்தின் அலுவலக பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களிடம் உங்கள் லக்கேட் டேக் எண், பெட்டியின் விபரம், உள்ளே உள்ள பொருட்களின் விபரம், உங்கள் பாஸ்போர்ட், விலாசம், தொலைபேசி எண் விபரங்கள் அனைத்தியும் அவர்கள் தரும் படிவத்தில் புகாராக எழுதி கொடுக்கவேண்டும், பின் கஸ்டம்ஸ் க்ளியரன்ஸ் என்று வேறொரு படிவம் தருவார்கள் அதையும் பூர்த்தி செய்தி அங்குள்ள சுங்க அதிகாரிகளிடம் முத்திரை பெற்று அதே பணியாளர்களிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும், ஒரு புகாரில் நகலும் உங்களுக்கு தருவார்கள். இந்த பணிகளுக்கு விமான நிறுவன அலுவலர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அதன்பின் அவர்கள் உங்கள் பொதிகள் வந்த உடன் உங்களுக்கு போன் மூலம் தகவல் தருவார்கள். நீங்கள் மறுபடியும் விமான நிலையம் வந்து உங்கள் பொதிகளை சுங்க சோதனை முடித்து எடுத்துசெல்லவேண்டும்.

ஒருவேளை நீங்கள் வரமுடியாவிட்டால், நீங்கள் யாரை பொதி எடுக்க அனுப்புகின்றீர்களோ அவரின் விபரம் எழுதி பொதி எடுக்கும் அவருக்கு கொடுத்து நோட்டரி வக்கீல் மூலம் 100 ரூபாய் முத்திரை பேப்பரில் கடிதம் கொடுக்க வேண்டும், அதன் கூட புகார் கடிதத்தில் நகல், உங்கள் பாஸ்போர்ட் நகல் இவைகளை கொடுத்து அனுப்பினால் அவர் எடுத்து வரமுடியும்.

இதன் மூலம் நான் சொல்ல வரும் தகவல், குறைந்த பொருட்களை கொண்டு வாருங்கள். பெண்களை தக்க துணை இன்றி தனியாக அனுப்பாதீர்கள். அனாவசியமாக காரைகொண்டு வந்து செலவு செய்யாமல் வசதியாக ரயில் பஸ் பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளுங்கள். பொருட்கள் வராமல் போனால் அதற்க்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள். 
courtesy:பல்சுவை தகவல் களஞ்சியம்

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment