அதிரையில் காஸ் விநியோகத்திற்கு கூடுதல் வசூல் ! முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிய அதிரை இளைஞர் !

IMAGINE2FUTURE
0
அரசு நிறுவனமாகிய இன்டேன் மூலம் அதிரையில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்த சில வாரங்களில் ஊழியர் மூலம் விநியோகிக்கப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும்
பில் தொகையை வீட கூடுதலாக வசூல் செய்வதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியது. இதுகுறித்து அவ்வப்போது புகார்கள் தெரிவித்து வருவதும் வாடிக்கையாக இருந்து வந்தன.

புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே வசூல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தன. இதைத் தொடர்ந்து நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கடற்கரைத்தெரு ஜமாத் நிர்வாகிகளில் ஒருவரும் 'சேனா மூனா' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஹாஜா முகைதீன் அவர்கள் நமது மாநில முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தனது கோரிக்கையை புகாராக அனுப்பி இருந்தார். 


இதற்கு பலன் சேர்க்கும் வகையில் கூடுதல் வசூல் வேட்டை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலுவலர்கள் ஹாஜா முகைதீன் அவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். விரைவில் நல்லதொரு முடிவு எட்டும் என்று எதிர்பார்ப்போம் !

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)