அபுதாபிவாழ் அதிரையர்களுக்கான நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி அய்மான் அமைப்பின் தலைவர் சகோ.சாகுல் அவர்களது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அபுதாபி, முஸஃபா ஆகிய பகுதிகளிலிருந்து
அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி நிரல்:
7:15 - இஃப்தார்
7:30 - மஃரிப் தொழுகை
7:45 - விருந்தினர் சுயஅறிமுகம்
8:00 - பைத்துல்மாலின் அவசியம் மற்றும் அறிமுகம் - சகோ. S.M.A.ஷாகுல்
8:15 - அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள் தேர்வு
8:45 - நன்றியுரை - சகோ.சபீர் (ABM துபை கிளை - கெளரவ ஆலோசகர்)
நிகழ்ச்சிக்கு துபாய் மற்றும் அபுதாபி மற்றும் முஸஃபா பகுதியிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். மேலும்,திருவண்ணாமலை சமூக சேவகர் சகோ.அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கீழ்கண்ட முதன்மை நிர்வாகிகள் கலந்து கொண்டவர்களால் முன்மொழியப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்கள்.
கெளரவ ஆலோசகர் - சகோ.ஷாகுல் [தலைவர், அய்மான்] -(050-7824129)
தலைவர் - 'கவியன்பன்' அபுல் கலாம் (056-7822844)
துணை தலைவர் - சகோ.அப்துல் மாலிக் [NPCC] - (050-7914780)
செயலர் (அபுதாபி) - சகோ.பைஸல் (050-9431868)
செயலர் (முஸஃபா) - சகோ.அப்துல் ஜலீல் (050-7940545)
பொருளர் - சகோ.மொய்தீன் (050-8488667)
அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள்
கலந்து கொண்டவர்களிடம் உறுப்பினர் படிவம் விநியோகிக்கப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபி பைத்துல்மால் கிளைகள் மூலம் ஃபித்ரா, ஜகாத் மற்றும் ஸதகா தர்மங்களை வசூலித்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பி வைப்பது என்றும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர்களின் மாதாந்திர அமர்வு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இஃப்தார் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்த சகோ.ஷாகுல் அவர்களுக்கு பைத்துல்மால் துபை கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.
தகவல் & புகைப்படம் : சகோ.N.ஜமாலுதீன் (ABM துபை கிளை செயலர்)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது