சுகாதாரம் சீர்கெட்டு காணப்படும் அதிரை C.M.P லேன் பகுதி,புழம்பிக் கொண்டிருக்கும் அப்பகுதி மக்கள்...

0
 அதிரை சாலைகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளினால் சுகாதாரம் சீர்கெடும் அபாயம் நிலவியுள்ளது.அதிரை சாலைகளை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான சாலைகள் குண்டும்
குழியுமாகவே காணப்படுகிறது.இப்பொழுது மழைக்காலம் வேறு ஆரம்பித்துள்ளது,இதனால்
அந்த சாலைகளில் மழி நீர் தேங்கி ஒரே சேராக உள்ளது.
மேலும் நமதூரின் C.M.P லேன்,கள்ளுக்கொல்லை,செட்டித்தோப்பு பகுதிகளின் சாலை ஓரங்களில் காணப்படும் குப்பைகளினால் இந்த பகுதிகள் முழுவதும் ஒரே ,கொசுக்கள் மொய்த்து இந்த பகுதிகளில் செல்லவே அருவருப்பாக உள்ளது.இப்படி சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளினால் இந்த பகுதிகளில் மலேரியா,டைஃபாய்டு,டெங்கு போன்ற கொடிய வியாதிகள் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
நமதூர் கள்ளுக்கொல்லை சாலைகளின் ஓரங்களில் புதர்கள் மண்டி காணப்படுவதால் இந்த பகுதிகளில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது.மேலும் இந்த  பகுதியின் சாலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை,அந்த அளவுக்கு இந்த பகுதிகளில் குண்டு குளியுமாக உள்ளது.
C.M.P லேன் வாய்க்காளில் குப்பை கொட்டியதால் வாய்க்காளில் அடைப்பு ஏற்ப்பட்டு நீர் போக முடியாமல் நீர் தேங்கி அந்த வாய்க்கலே சாக்கடையாக மாறியுள்ளது.
எனவே இந்த பகுதி மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு,இந்த பகுதிகளில் நோய்கள் பரவாமல் இருப்பதற்கு பேரூராட்ச்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்து இந்த பகுதிகளின் சாலைகளை சீரமைக்குமாறு இந்த பகுதி மக்களின் சார்பாக எங்கள் கோரிக்கையை முன்வைக்கிறோம்
















Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)