![]() |
| adiraipirai.com |
உணவுகளை செய்ய நமதூர் மக்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.நமதூரில் பெருநாள் என்றாலே நினைவுக்கு வருவது
பொரிச்ச ரொட்டி,அடுக்கு ரொட்டி,இடியப்பம்,கறி ஆனம்,ரவ்வா,சேமியா,ஜவ்வரிசி கஞ்சி,பால் கடப்பாசி.இவைகளையெல்லாம் விட நமதூர் மக்கள் மிகவும் விரும்பி உண்ணும் உணவான வட்லாப்பம் செய்ய தேவையான முட்டைகள் வண்டி வண்டியாக நமதூர் கடைகளுக்கு வந்திறங்கிக் கொண்டிருந்தபடி உள்ளது.மக்கள் பிற பொருட்கள் வாங்குவதோடு முட்டையையும் அதிகமாக வாங்கிக் கொண்டு சென்றபடி உள்ளனர்.இதனால் முட்டை வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்களுக்காக வட்லாப்பம் செய்யும் முறை பின்வருமாறு,
தேவையான பொருட்கள்:
முட்டை - பத்து
சீனி - 350 கிராம்
பசும் பால் -1/2 லிட்டர்
எலக்கய் -3
பாதாம் முந்திரி அறைத்தது - 100 கிராம்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முட்டை,சீனி,ஏலக்காய் இவைகளை மிக்சியில் போட்டு 1 நிமிடத்திற்க்கும் குறைவான நேரம் அதை அறைத்துக் கொள்ளவும்.அறைக்கப்பட்ட விழுதில் சிறிதளவு உப்பை கலந்து கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் வடிதட்டை கொண்டு இறுத்துக் கொள்ளவும்.மேலும் அறைக்கப்பட்ட முந்திரி பாதாம் கலவையை இவற்றில் கலந்துகொள்ளவும்.குக்கரில் தண்ணீர் விட்டு அதன் மீது கலக்கப்பட்ட கலவை உள்ள பாத்திரத்தை வைத்து குக்கரை முடிக்கொள்ளவும்.4 விசில் சத்தத்திற்க்குப் பிறகு குக்கரை இறக்கவும்.பிறகு தாளிக்கும் சட்டியில் ரோஸ் நெய்யை போட்டு சூடான பிறகு அதில் முந்திரி திராட்ச்சையை பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.இதை குக்கரில் இருந்து எடுக்கப்பட்ட வட்லாப்பத்தின் மீது தூவினால் சுவையான வட்லாப்பம் ரெடி.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது