முடங்கிக் கிடக்கும் பேருந்து நிலைய கட்டுமான பணி,(புகைப்படங்கள்) அதிரை மக்களின் கனவு நிறைவேறுமா?

0
நமதூரின் பேருந்து நிலையத்தை சீரமைத்துத் தர வேண்டும்,வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும் என்ற நமதூர் மக்களின் பல நாள் கோரிக்கை (கனவு) நிறைவேறும் வகையில் சென்ற ஆண்டு அதிரை பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம்
கட்டுவதற்க்கான பணிகள் துவங்கப்பட்டன.இச்செய்தியை அறிந்த நமதூர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.ஆனால் அவர்களின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை என்றே கூற வேண்டும்.வணிக வளாக கட்டுமான பணி மின்னல் வேகத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு பணியும் நடைப்பெறாமல் முடங்கியுள்ளது.வேலைகள் முடிந்து வியாபாரம் நடக்க வேண்டிய இந்த கட்டடம் தற்பொழுது எப்படி உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?.....கயவர்கள் இரவு சீட்டாடும் இடமாகவும்,மது அருந்தும் இடமாகவும் தான் தற்பொழுது இருந்து வருகிறது.இதற்க்கு என்ன தான் முடிவு? நமதூர் மக்களின் கனவு நனவாகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.








Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)