விலக்கிய வேளையை விடுதலை நாளாய்
நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி
வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே!
உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப்
முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம்
கயிற்றினில் கட்டுள இழையென இனிதே!
இரவிலும் பகலிலும் இடர்களைக் கொடுத்த
கரங்களை விரட்டிய கணமதை நினைத்து
மரத்தினில் படர்ந்துள கிளைகளாய்க் குடும்ப
உறவினை உணர்வுடன் அளித்திடும் தினமே!
விடியலாய்த் தெரிந்திடும் விடுதலை பெறவே
கடினமாய் உழைத்தநற் றலைமையை மதித்து
படித்தவர் படிப்பிலார்ப் பொருட்டிலா நிலையில்
குடியர சதனிலும் குறிப்பிடு விழைந்தே !
நடத்திடும் செயலிலும் நியாயமாய் இருந்தால்
கடந்திடும் நிகரிலாக் குணத்தினாய் இருந்தால்
கடலொடும் மலைகளும் கடந்துதான் விரைவாய்ப்
படர்ந்திடும் பரதமின் புகழெலாம் சிறந்து
உறுதியாய்ப் பிடித்துளம் நிறைவுடன் ஒருமைப்
பெறுதலைப் பரப்புக பெரிதினும் பெரிதாய்
”பரதமே எனதென” பெருமிதம் வழிய
வரட்டுமே உணர்வுடன் வளர்ச்சியும் நிறைந்தே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
Skype : kalamkader3

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
ReplyDelete“இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்”
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
கனவில் சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
பொய்கள் மெய்த்திட
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஜாதி சண்டை, மத சண்டை,
தண்ணீர் சண்டை, அரசியல் சண்டை
ஒளிந்திட ஆடுவோமே பள்ளு பாடுவோமே
கிடைத்த சுதந்திரம் அரசியல் வாதிகளை விட்டு
நம் கைகளில் கிடைத்திட
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
அதிரைமன்சூர்