அதிராம்பட்டினத்தின் மையப் பகுதியாகவும் நமதூரின் முக்கிய பேருந்து நிறுத்துமிடமாகவும் அதிரை சேர்மன் வாடி உள்ளது.அதிரை பிரதான பகுதியாகவும் நாள்தோரும் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுகின்ற இடமாகவும் உள்ள இந்த பகுதியில் உள்ள ஒரு மின் கம்பம் கவனிப்பாரின்றி வளைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மின் கம்பம் சாலையில் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுவதற்க்கு வாய்ப்பு உள்ளது என இந்த பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மின் கம்பத்தால் பின்னால் வர இருக்கும் விபரீதங்களையும் மனதில் வைத்து இந்த பகுதியில் வேறு நல்ல மின் கம்பத்தை அமைக்குமாறு சம்பத்தப்பட்ட துறையிடம் பொதுமக்களின் சார்பாகவும் அதிரை பிறையின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிரோம்.




இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நமதூர் EB யில் உள்ளவர்கள் எந்த இலட்சணத்தில் வேலை செய்கிறார்கள் என்று. நிறுவாகமே சரி இல்லாத போது, அதில் வேலை செய்பவன் மட்டும் எப்படி இருப்பான். வெலைங்கிடும் அதிராம்பட்டினம்.
ReplyDelete