அறந்தாங்கி ஒன்றியம் மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு வெள்ளையம்மாள் என்ற மனைவியும், பாண்டி, பாஸ்கர் என்ற மகன்களும், தேவி, பிரியா என்ற மகள்களும் உள்ளனர். ராஜேந்திரன் அறந்தாங்கியில்
. மரமில்லில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், ராஜேந்திரன் அறந்தாங்கி எழில்நகரில் உள்ள ஓய்வு பெற்ற அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி உதவியாளர் வீரராகவன் என்பவரது வீட்டில் சிறு சிறு வேலைகளை சம்பளத்திற்கு பார்த்து வந்துள்ளார்.
இதே போல ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வீரராகவன் வீட்டிற்கு ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது வீரராகவன், ராஜேந்திரனிடம், வீட்டின் அருகே வீட்டிற்று இடையூறாக வளர்ந்துள்ள கருவேலமரங்களின் கிளைகளை வெட்டிவிடுமாறு கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
உடனே ராஜேந்திரன், வீரராகவன் வீட்டிற்கு இடையூறாக இருந்த கருவேலம் மரக்கிளைகளை வெட்டியுள்ளார்.
பின்னர் வீட்டின் மாடிக்கு ஏறிய ராஜேந்திரன், மாடிப்பகுதியை நோக்கி வளர்ந்து வந்த கிளையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் வைத்திருந்த அரிவாள் எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே கைக்கெட்டும் தூரத்தில் சென்ற ராஜேந்திரபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து அறந்தாங்கி நகருக்கு மின்சாரத்தை கொண்டுவரும் உயர் மின் அழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது.
உடனே அரிவாள் வழியாக மின்சாரம் ராஜேந்திரன் மீது பாய்ந்துள்ளது. இதில் கை, தலை, வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகள் கருகி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ராஜேந்திரன் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி முற்றிலும் எரிந்து அரிவாளின் ஒருபகுதி ராஜேந்திரன் கையிலேயே இருந்தது.
உடனே அரிவாள் வழியாக மின்சாரம் ராஜேந்திரன் மீது பாய்ந்துள்ளது. இதில் கை, தலை, வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகள் கருகி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் ராஜேந்திரன் வைத்திருந்த அரிவாளின் கைப்பிடி முற்றிலும் எரிந்து அரிவாளின் ஒருபகுதி ராஜேந்திரன் கையிலேயே இருந்தது.
மாடியில் வேலை பார்த்த ராஜேந்திரன் எவ்வித சப்தமும் இல்லாமல் இருப்பதால் சந்தேகமடைந்த வீரராகவன் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ராஜேந்திரன் உடல் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அறந்தாங்கியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: இது போன்று மின்மாற்று கம்பிகள் தங்கல் வீட்டின் மேல் சென்றால் கட்டாயம் அதை தங்கள் பகுதி மின்சார வாரியத்திடம் தெரிவித்து வேறு வழியில் மாற்ற சொல்லி வழியுறுத்துங்கள்
தகவல்: ஜமால் கேம்ப் ரியாத்
நன்றி: நக்கீரன்

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது