அதிரையில் கூட்டு குர்பானித் திட்டம், அறிவித்தது அதிரை பைத்துல்மால்

0
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..,

வருகின்ற தியாகத்திருநாள் ஹஜ்
பெருநாளை முன்னிட்டு அதிரை பைத்துல்மாலின் கீழ்க்கண்ட விபரப்படி
குர்பானித் திட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரமான செம்மறி முழு ஆடுகள் உயிரோடு நியாயமான விலையில் தரப்படும். நமது சமுதாயத்தில் ஏழை,எளிய மாணவ,மாணவியருக்கு இலவசக் கல்விக் கட்டணம், பள்ளிச் சீருடை, ஆதரவற்ற முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதாந்திர பென்ஷன், இலவச மருத்துவ உதவி என எண்ணற்ற சேவைகளைச் செய்திட குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கும் இலாபம் பயன்படுத்துப்படுகிறது.

எனவே, குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டுப் பங்குகள் வாங்கியும் குர்பானித் தோல்களை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்கியும் உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கூட்டுக் குர்பானி ஆடு பங்கு ஒன்றுக்கு ரூபாய் 1,100/-

மேலும் விபரங்களுக்கு தாங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்

அதிரை பைத்துல்மால் அலுவலகம் (+91) 04373 241690
ஹாஜி ஜனாப். பர்கத் [தலைவர்] 9942520199
ஹாஜி ஜனாப். அப்துல் ஹமீது [செயலாளர்] 9952120166
ஹாஜி ஜனாப். முஹம்மது முஹைதீன் 9443448115
ஹாஜி ஜனாப். அஹ்மது ஜலீல் 9942436036


சென்ற ஆண்டு அதிரை பைத்துல்மாலின் குர்பானித் திட்டத்தில் சேர்ந்து ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
நிர்வாகம் - அதிரை பைத்துல்மால். 

அதிராம்பட்டினம் - 614 701
தஞ்சை மாவட்டம் போன் (+91) 04373 241690
ஈமெயில் : abmchq@gmail.com
adiraibaithulmal@yahoo.com 

நன்றி:அதிரை நியூஸ்

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)