நமதூரில் மாறி வரும் கால நிலை, தாங்கமுடியாத வெயிலின் வாட்டம், நிலத்தடி நீர் குறைப்பாடு, சுகாதார சீர்கேடு, சுகாதாரம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமை, தவிர்க்க முடியாத கால்வாய் பிரச்சனை, இவை யாவும் தான் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது.
கடந்த பத்து வருடங்களை எடுத்துக்கொண்டால் அதிராம்பட்டினம் எண்ணில் அடங்காத வளர்ச்சியை கண்டுள்ளது என்பது மறக்கமுடியாத உண்மை. இவை ஒரு பக்கம் இருக்க இந்த வளர்ச்சியால் நமதூருக்கு கிடைத்த நன்மைகள் பல என்றாலும் அதற்க்கு நிகராக தீமைகளும் இருக்கவே செய்கின்றன. உதாரணத்திற்க்கு வைத்துக்கொண்டால் நமதூரில் அண்மை காலமாக நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறை ஒரு சான்று, இதற்க்கு என்னதான் தீர்வு என்பது ஒருபக்கம் இருக்க இதற்க்கு காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்தால் தெரியும். இதற்க்கு முக்கிய காரணமே விஞ்ஞான வளர்ச்சியை அளவுக்கு அதிகமாக தேவையின்றி நாம் பயன்படுத்தியது என்பதே காரணம். ஆம் முன்பெல்லாம் நெடுந்தூரம் நடந்து குளர்த்திற்க்கும் ஏரிக்கும் நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்தனர் மக்கள், அதனால் அந்த கஷ்டத்தை புரிந்துக்கொண்டு தண்ணீரை சிக்கனமாக செலவு செய்தனர்.
ஆனால் இப்பொழுது அப்படியா..! ஸ்விட்ச்சை ஒரு அமுக்கு அமுக்கினால் ஒருவாரத்திற்க்கு தேவையான தண்ணீர் நம் வீட்டு தண்ணீர் தேக்கத் தொட்டியில் ஐந்து நிமிடத்தில் நிரம்பிவிடும் இதனால் நமக்கு தண்ணீரின் அருமை தெரியாமல் இஷ்டத்துக்கு செலவு செய்கிறோம். சரி முன்பெல்லாம் வாய்க்காள்களிலாவது ஓரளவு தண்ணிர் வந்துகொண்டிருந்தது அதையும் குப்பைகளை போட்டு மூடிவிட்டோம்.
விளைவு........தண்ணீர் தட்டுப்பாடு
குடிநீரை விலை கொடுத்து வாங்கும் அவலம். இதையே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் வரும் காலங்களை யோசித்துப் பாருங்கள், தண்ணீரை பெட்ரோல், டீசல் போன்று பங்குகளில் விலை கொடுத்து அளந்து வாங்கக்கூடிய நீலை வரக்கூடும் என்ற அச்சம் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை கண்டால் நமக்கு தோன்றுகிறது.
இது நமக்கு தேவையா?
இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையை சரியாக பயன்படுத்தாமல் இருந்ததன் விளைவு தான் இது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏற்கனவே நம் ஊரின் முக்கிய நீர் ஆதரங்களான குளங்கள் அனைத்தும் சிறுவர்களின் விளையாட்டுத் திடலாகவும், கழிவு நீர் தேங்கும் இடமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்க்கு என்ன தான் வழி? நீங்களே உங்கள் கருத்தை கூறுங்கள்....

இந்த பதிவிற்கு என் முதல் நன்றி தண்ணீர் சிக்கனம் பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வோண்டும்
ReplyDeleteசகோதரர் கமருதீன் அவர்களின் கருத்தை வரவேற்க்கிறோம். மேலும் கருத்துக்கள் பதிய வாழ்த்துக்கள்
Deleteநம் பதிவிற்க்கு அதிரை எக்ஸ்பிரஸில் வந்த வந்த கருத்து
ReplyDeleteநமதூருக்கு இருந்த ஒரே தண்ணீர் ஆதாரம் சி.எம்.பி. வாய்க்கால் தண்ணீர்தான் பல வழிகளில் நம்மூரை சீர்குலைக்க எண்ணும் மாற்றுமதத்தவர்கள் அரசியல்வாதி துணையுடன் வழக்கமாக வரக்கூடிய சி.எம்.பி வாய்க்கால் தண்ணியை நிறுத்தி வீணாக கடலுக்கு திருப்பி விடுகின்றனர்.காரணம் குளங்கள் யாவும் பள்ளி வாசல்களுக்கு சொந்தம் என்று வந்தபின்னல்தான்.ஆகவே இப்பிரச்சினையை தீர்க்க அணுக வேண்டியவர்களை அணுகி சி.எம்.பி தண்ணீர் வர ஊர் ,குறைகளை நிவர்த்தி செய்து வரும் அதிரை எக்ஸ்பிரசையும் கேட்டுக் கொள்கிறேன்.இதுதான் தருணம்.